படப்பிடிப்புக்கு லேட்.. ஏ.வி.மெய்யப்ப செட்டியார் செய்த வேலை... எஸ்.வி.ரங்காராவுக்கு நேர்ந்த சங்கடம்!..

by சிவா |
ranga rao
X

ஆந்திராவை சேர்ந்தவர் என்றாலும் 1950 மற்றும் 60களில் தமிழ் திரையுலகில் குணச்சித்திர நடிகராக கலக்கியவர் எஸ்.வி.ரங்கா ராவ். அவரின் தமிழ் உச்சரிப்பு அவ்வளவு அழகாக இருக்கும். எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் குணச்சித்திர நடிகராக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியவர். இவர் சோகமாக வசனம் பேசி நடித்தால் ரசிகர்களுக்கே கண்ணீர் வரும். அந்த அளவுக்கு இயல்பான நடிப்பை கொடுத்தவர்.

ranga rao

1967ம் வருடம் வெளியான திரைப்படம் பக்த பிரகலாதா. இந்த படத்தில் இரண்ய கசிபு எனும் வேடத்தில் ரங்காராவ் நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது ரங்காராவ் படப்பிடிப்பு குழுவினருக்கு சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்கிற புகார் அப்படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனத்திற்கு சென்றது.

ranga rao

இது ஏவி மெய்யப்பட்ட செட்டியாருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. எனவே, ஏவி மெய்யப்ப செட்டியாரே ஒருநாள் படப்பிடிப்பிற்கு தளத்திற்கு வந்துவிட்டார். நம்மை பற்றி புகார் வந்ததால்தான் செட்டியார் படப்பிடிப்புக்கு வந்துவிட்டார் என்பதை ரங்காராவ் புரிந்து கொண்டார்.

avm

படப்பிடிப்பு இடைவேளையின் போது செட்டியாரிடம் சென்ற ரங்கராவ் தான் அணிந்திருந்த கவச ஆபரணங்களை கழட்டி அவரின் கையில் கொடுத்து ‘மிஸ்டர் செட்டியார் இந்த ஆபரணங்கள் எவ்வளவு கணம் என பாருங்கள். இதை அணிந்து கொண்டு நான் வசனம் பேசி நடிக்க வேண்டும். அப்படி எவ்வளவு நேரம் நடிக்க முடியும்?.. நான் வீட்டிற்கு சென்ற பின்பும் பாரம் தாங்கிய உடம்பின் வேதனை என்னை விட்டு போகவில்லை. எப்படி என்னால் சீக்கிரம் படப்பிடிப்புக்கு வர முடியும்?’ என கேட்க. அவர் சொல்வதில் இருந்த நியாயத்தை புரிந்து கொண்ட செட்டியார் ‘நீங்கள் செய்ததில் தவறே இல்லை’ என சொன்னாராம்.

அதன்பின் அவர் படப்பிடிப்புக்கு வரவே இல்லை. பக்த பிரகலாதா படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

Next Story