Cinema History
பாதி படம் எடுத்தபின் குப்பையில் போடப்பட்ட சிவாஜி படம்!. ஆனா அங்கதான் ஒரு டிவிஸ்ட்!..
ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு ஒரு பழக்கம் உண்டு. பாடம் பாதி வளர்ந்துவிட்ட நிலையில் கூட அவருக்கு ஹீரோவோ, படத்தின் கதையோ திருப்தி இல்லை எனில் தூக்கி ஓரத்தில் போட்டுவிட்டு மீண்டும் புதிதாக எடுக்க சொல்வார். அல்லது கதாநாயகனை மாற்ற சொல்வார். இப்படி ஏவிஎம் நிறுவனம் தயாரிக்கும் படங்களில் பலமுறை நடந்திருக்கிறது.
நடிகர் திலகம் சிவாஜியையே பராசக்தி படத்தில் நடிக்க வைக்க ஏவி மெய்யப்ப செட்டியார் விரும்பவில்லை. ஏனெனில், சிவாஜி சின்ன பையன் போல இருக்கிறார். ஒல்லியாக இருக்கிறார் என அவருக்கு பல தயக்கம். இப்படத்தை சிவாஜியின் நாடக குரு பெருமாள் முதலியார் ஏவிஎம் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்தார்.
இதையும் படிங்க: எனக்கு பட்டை நாமம் போட்டாங்க!. உனக்கு நாமக்கட்டி!.. சிவக்குமாரை அதிரவைத்த சிவாஜி!..
சிவாஜிதான் ஹீரோ என்பதில் பெருமாள் தீர்க்கமாக இருந்தார். பாதி படம் முடிந்த நிலையில் கூட சிவாஜியை தூக்கிவிட்டு கே.ஆர்.ராமசாமியை ஹீரோவாக போட்டு படத்தை எடுப்போம் என செட்டியார் சொன்னார். ஆனால், பெருமாள் அதை ஏற்கவில்லை. செட்டியாரை சமாதானம் செய்து சிவாஜியை நடிக்க வைத்தார். அப்படி சிவாஜி நடித்த பராசக்தி எப்படிப்பட்ட வெற்றியை பெற்றது என்பது எல்லோருக்கும் தெரியும்.
பின்னாளில் அதே சிவாஜியை வைத்து ஏவிஎம் நிறுவனம் தயாரித்த திரைப்படம்தான் பச்சை விளக்கு. 1964ம் வருடம் வெளியான இந்த படத்தை பீம்சிங் இயக்கியிருந்தார். சிவாஜியுடன் எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி, நாகேஷ் என பலரும் நடித்திருந்தனர். இந்த படம் உருவானபோது பாதி படம் முடிந்திருந்த நிலையில் எடுத்தவரை போட்டு பார்த்தார் மெய்யப்ப செட்டியார்.
இதையும் படிங்க: கலைஞருக்கும் கண்ணதாசனுக்கும் எழுந்த மோதல்!.. படத்திலிருந்து விலகிய சிவாஜி!…
படம் அவருக்கு திருப்தியாக படவில்லை. எனவே, சிவாஜி ரயில் ஓட்டுபவராக இருக்கிறார் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு மீதி எல்லாவற்றையும் மாற்றி எடுங்கள் என சொல்லிவிட்டார். அதன்பின் கதையில் பல மாற்றங்கள் செய்து எடுக்கப்பட்டுதுதான் பச்சை விளக்கு திரைப்படம்.
இந்த கால கட்டத்தில் இயக்குனர் என்ன எடுக்கிறாரோ அதுதான் படம். ஆனால், அந்த காலத்தில் தயாரிப்பாளர்களின் வார்த்தைக்கு மதிப்பும், மரியாதையும் இருந்தது என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
இதையும் படிங்க: அந்தப் படத்துல நடிச்சதுக்கு மக்கள் கொடுத்த பரிசு என்ன தெரியுமா? வேதனையில் சிவாஜி.. இதெல்லாம் நடந்திருக்கா