More
Read more!
Categories: Cinema History Cinema News latest news

ஓடிக்கொண்டிருந்த கமல் படத்தை நிறுத்தச் சொன்ன மெய்யப்பச் செட்டியார்… ஆனா நீங்க நினைக்கிற மாதிரி இல்லை!!

1960 ஆம் ஆண்டு ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் தயாரிப்பில் உருவான திரைப்படம் “களத்தூர் கண்ணம்மா”. இதில் ஜெமினி கணேசன், சாவித்திரி ஆகியோர் ஜோடியாக நடித்திருந்தனர். கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான திரைப்படம் “களத்தூர் கண்ணம்மா”தான் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள்.

Kalathur Kannamma

“களத்தூர் கண்ணம்மா” திரைப்படத்தை பீம் சிங் இயக்கியிருந்தார். ஜாவர் சீத்தாராமன் இத்திரைப்படத்திற்கான கதையை எழுதியிருந்தார். இத்திரைப்படம் தமிழில் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து இத்திரைப்படம் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தெலுங்கிலும் இத்திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது.

Advertising
Advertising

Kalathur Kannamma

இவ்வாறு ஆந்திரா திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த “களத்தூர் கண்ணம்மா” திரைப்படத்தின் தெலுங்கு டப்பிங்கை திடீரென நிறுத்தச் சொன்னாராம் மெய்யப்ப செட்டியார். நன்றாக ஓடிக்கொண்டிருந்த படத்தை ஏன் நிறுத்தச் சொல்கிறார் என்று பலரும் அவரிடம் கேட்டனர்.

A.V.Meyyappa Chettiyar

அதற்கு மெய்யப்பச் செட்டியார் “அந்த படம் ரொம்ப நல்ல படம். தெலுங்குல நன்றாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் இந்த படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடாமல் இதை ரீமேக் செய்து வெளியிட்டால் இன்னும் மிகப்பெரிய வெற்றி பெறும் என நினைக்கிறேன். ஆதலால் இப்போதைக்கு இந்த படத்தை நிறுத்தி வைக்கிறேன்” என கூறினாராம்.

Mooga Nomu

அதன் பின் “களத்தூர் கண்ணம்மா” திரைப்படத்தை “மூகா நோமு” என்ற பெயரில் தெலுங்கில் உருவாக்கினார் மெய்யப்பச் செட்டியார். இதில் தெலுங்கு பட உலகின் முன்னணி நடிகரான நாகேஸ்வர ராவ், ஜமுனா ஆகியோர் ஜோடியாக நடித்திருந்தனர். இத்திரைப்படமும் மாபெரும் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் ஒரு திரைப்படத்தின் வெற்றியை முன் கூட்டியே கணித்து மிக தைரியமான முடிவுகளை எடுக்கக்கூடிய தயாரிப்பாளராக மெய்யப்பச் செட்டியார் திகழ்ந்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது.

இதையும் படிங்க: கமுக்கமாக தயாரிப்பு பணியில் இறங்கிய தளபதி… இந்த படத்துக்கு விஜய்தான் புரொட்யூசரா?… இதெல்லாம் வேற நடக்குதா!

Published by
Arun Prasad

Recent Posts