அவதார் 2 படம் எப்படி இருக்கு?!.. என்ன சொல்றாங்கன்னு கேட்போமா??.. டிவிட்டர் விமர்சனம்...

by Arun Prasad |   ( Updated:2022-12-16 05:16:21  )
Avatar 2
X

Avatar 2

கடந்த 2009 ஆம் ஆண்டு பிரபல ஹாலிவுட் இயக்குனரான ஜேம்ஸ் காம்ரூனின் இயக்கத்தில் வெளியான பிரம்மாண்ட திரைப்படமான “அவதார்”, உலக ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து “அவதார் 2” திரைப்படம் எப்போது வெளிவரும் என பலரும் காத்துக்கொண்டிருந்தனர்.

Avatar 2

Avatar 2

இந்த நிலையில் அவதாரின் இரண்டாம் பாகமான “அவதார்: தி வே ஆஃப் வாட்டர்” திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது “அவதார் 2” திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது..

இன்று அதிகாலை காட்சியை பார்த்த ரசிகர்கள் பலரும் “படம் ஸ்லோவாக இருக்கிறது”, “அவதார் முதல் பாகம் போல இல்லை” போன்ற நெகட்டிவ் விமர்சனங்களே பெரும்பாலும் அளித்து வருகின்றனர். எனினும் ஒரு பக்கம் “படம் நன்றாக இருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கிறது” போன்ற பாஸிட்டிவ் விமர்சனங்களும் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ரசிகர்கள் டிவிட்டரில் இத்திரைப்படத்தை குறித்து என்ன கூறுகிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.

Avatar 2

Avatar 2

ஒருவர் “அவதார் 2 படம் ஒரு விஷுவல் ட்ரீட். எமோஷனலாக நம்முடன் ஒன்றிப்போகிறது. ஆனால் கிளைமேக்ஸ் இன்னும் கொஞ்சம் சிறப்பாக அமைந்திருக்கலாம். மற்றபடி படம் நன்றாக இருக்கிறது. படத்தை நவீன சப்த அம்சங்களுடன் கூடிய தரமான திரையரங்கில் பாருங்கள்” எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

Avatar 2

Avatar 2

மற்றொருவர் “அவதார் 2 படம் பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்த்ததுதான். ஆனால் எமோஷனலாக நன்றாக ஒன்றிப்போகிறது. கதாப்பாத்திரங்களும் கதையம்சமும் அவதார் முதல் பாகத்தை விடவும் அருமையாக இருக்கிறது” என கூறியுள்ளார்.

Avatar 2

Avatar 2

இன்னொருவர் “படத்தின் இரண்டாம் பாதியில் கடைசி ஒரு மணி நேரம் சிறப்பாக இருக்கிறது. கதைக்களம் மிகவும் சாதாரணமாக இருக்கிறது. ஆனால் படம் பார்த்த அனுபவம் பிரம்மாண்டமாக இருக்கிறது” என கருத்து தெரிவித்துள்ளார்.

Avatar 2

Avatar 2

ஒருவர் “அவதார் 2 விஷுவலாக பிரம்மாண்டத்தை கொடுத்திருக்கிறது. ஆனால் படத்தில் ஸ்கிரிப்ட் மிகவும் பலவீனமாக இருக்கிறது” என கூறியுள்ளார்.

Avatar 2

Avatar 2

மற்றொருவர் “ஒரே வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் அவதார் 2 திரைப்படம் இந்த வருடத்தின் மிகச்சிறந்த பிரம்மாண்ட திரைப்படம்” என கூறியுள்ளார்.

Avatar 2

Avatar 2

இவ்வாறு “அவதார்: தி வே ஆஃப் வாட்டர்” திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்துகொண்டிருக்கின்றன. எனினும் இன்று காலை, நண்பகல் காட்சிகளை பார்க்கும் ரசிகர்களின் கருத்துக்களை வைத்துத்தான் படம் ரசிகர்களை ஈர்த்ததா? ஏமாற்றியதா? என்பது குறித்து முடிவு செய்யமுடியும்.

Next Story