ஹாலிவுட்டையே மிரளவைத்தவர்டா நம்ம Mr.பிரமாண்டம் ஷங்கர்.!

by Manikandan |
ஹாலிவுட்டையே மிரளவைத்தவர்டா நம்ம Mr.பிரமாண்டம் ஷங்கர்.!
X

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது வேறு யாருமல்ல ஷங்கர்தான். தமிழ் சினிமாவை இந்திய அளவில், ஏன் உலக அளவில் தலை நிமிர்ந்து பார்க்க வைத்தவர்களில் முக்கியமானவர் ஷங்கர். ஓர் தமிழ் படத்தை இவ்வளவு பிரமாண்டமாக எடுக்க முடியுமா என்று சிந்தித்து இருந்த நிலையில் தமிழ் படத்தையும் பிரமாண்டமாக எடுத்து அதனை உலக அளவில் வெளியிட முடியும் என நிரூபித்து காட்டியவர் ஷங்கர்.

இவரது திரைப்படங்களில் புது புது டெக்னாலஜி, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருக்கும். அதற்காக அதிக பொருட்செலவு கொண்டு, தான் நினைத்த காட்சிகள், நினைத்தபடி வரவேண்டுமென்று மெனக்கெடுவார்.

இதையும் படியுங்களேன் - காலையிலேயே ஆரம்பிச்சிடீங்களா.?! இவங்க அட்டகாசம் இன்னைக்கு தாங்காதே.!

இதனை பார்த்து பலர் முன்னுதாரணமாக கொண்டு சில காட்சிகளை அவர்களது படங்களில் இயக்கியுள்ளனர். அப்படி ஹாலிவுட் பிரம்மாண்ட அவெஞ்சர்ஸ் பட இயக்குனர், ஷங்கரின் எந்திரன் திரைப்படத்தில் இடம்பெற்ற க்ளைமேக்ஸ் காட்சியை பார்த்து இன்ஸ்பிரேஷனாக எடுத்து கொண்டுதான், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் அயர்ன் மேன் சண்டை காட்சியை வடிவமைத்ததாக கூறியுள்ளார்.

ஒரு ஹாலிவுட் பிரமாண்ட திரைப்பட இயக்குனர் நம்ம ஷங்கர் படத்தை பார்த்து ஒரு காட்சியை எடுத்துள்ளார் என்பது, நமது தமிழ் சினிமா அந்த அளவுக்கு விரிவடைந்துள்ளது என்பதை நமக்கு காட்டுகிறது. அடுத்தடுத்து தொடர்ந்து ஷங்கர் தமிழ் திரைப்படங்களை உலகளவில் தெரியும்படி இயக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Next Story