அவினாஷுடன் சேர்ந்து சூப்பர் ஷாப்பிங் செய்த டான்ஸ் ஜோடி டான்ஸ் அக்ஷிதா - வீடியோ பாருங்க!…

by சிவா |   ( Updated:2023-04-17 11:24:32  )
velavan
X

velavan

டான்ஸ் ஜோடி டான்ஸ் அவினாஷ் மற்றும் அக்ஷிதா என இருவரும் சேர்ந்து ஷாப்பிங் செய்துள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக வலம் வருபவர் அக்ஷிதா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பேரன்பு சீரியலில் இவர் ராஜராஜேஸ்வரி இரண்டாவது மருமகளாக நடித்து வந்தார்.

சமீபத்தில் சீரியலில் இருந்து வெளியேறியவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி என்ற சீரியலில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி முடிந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

இந்த நிலையில் அக்க்ஷிதா இந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் டைட்டில் வின்னர் அவினாஷ் உடன் சேர்ந்து சென்னை தி.நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.

ரம்ஜான் ஸ்பெஷலாக சிறப்பு தள்ளுபடி விற்பனை நடந்து வரும் ஆடை ஆபரணங்கள் ஆகியவற்றை எக்கச்சக்கமான கலெக்ஷன்களில் பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

சில்க் சாரீஸ் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், ஆயிரம் ரூபாய்க்கு நான்கு புடவைகள் என அசத்தலான ஆஃபர்களுடன் தள்ளுபடி விற்பனை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் சேர்ந்து ஷாப்பிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவினாஷ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கயலுக்கு தம்பியாக அன்பு கதாபாத்திரத்தில் சீரியலின் ஆரம்பத்தில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story