AVM : தமிழ் சினிமாவில் மிகவும் பாரம்பரியமான தயாரிப்பு நிறுவனமாக இருப்பது ஏவிஎம் நிறுவனம். அந்த காலத்தில் பாகவதரில் ஆரம்பித்து இந்த கால சூர்யா வரை ஏகப்பட்ட படங்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறது.
ஏவிஎம் மெய்யப்பச்செட்டியார்தான் அந்த காலத்தில் எல்லாருக்கும் முதலாளியாக இருந்தார். ஏன் எம்ஜிஆர் கூட இவரை முதலாளி என்றுதான் அழைப்பார். இந்த சினிமா நம்மோடு போய்விடக் கூடாது என்பதற்காக தன் மகன்களையும் சினிமாவிற்குள் புகுத்தினார்.
இதையும் படிங்க: தனுஷ் மட்டும்தான் பண்ணுவாரா? அவர் படிச்ச ஸ்கூல்ல ஹெட் மாஸ்டர்டா – சிம்புவின் அதிரடியான முடிவு
ஆரம்பத்தில் இருந்தே அதற்கான நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தார். ஏவிஎம் குமரன் மற்றும் சரவணன் இருவரும் அப்பாவின் வழிகளை பின்பற்றி அவர்களும் ஏராளமான படங்களை தயாரித்தனர். ரஜினியை வைத்து ஏகப்பட்ட படங்களை தயாரித்து வெளியிட்டது ஏவிஎம்.
இந்த நிலையில் திடீரென தன் தயாரிப்பு பணியை நிறுத்தப் போவதாக அறிவித்தது. அதன் பிறகு சினிமாவில் படம் எடுக்க ஆசைப்பட்டு வரும் சின்ன இயக்குனர்களை வைத்து படங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடப் போவதாகவும் சில செய்திகள் வெளியாகின.
இதையும் படிங்க: 50 வருடங்களில் முறியடிக்கப்படாத சாதனை… இதை அப்போதே செய்து காட்டிய நடிகர் திலகம்…! என்ன படங்கள்னு தெரியுமா?
ஆனால் இப்போதைய தகவலின் படி ஏவிஎம் நிறுவனத்தால் கடைசியாக வெளியான திரைப்படம் அயன். இந்தப் படத்தை கே.வி. ஆனந்த் இயக்க சூர்யா இந்தப் படத்தில் நடித்தார். பக்கா கமெர்சியல் கலவையாக அமைந்த இந்த அயன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பதிவு செய்தது.
அந்தப் படம் அப்படியே தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியிட தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்போது அதே அயன் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் முயற்சியில் ஏவிஎம் இருப்பதாக கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள்.
இதையும் படிங்க: ரஜினிகாந்த் நடிப்பில் நான் இயக்க வேண்டிய படம்.. தயாரிப்பு இந்த மாஸ் ஹீரோ தான்.. மிஸ்ஸானது இதனால் தான்.. அமீர் ஷாக்..!
முற்றிலும் வேற நடிகர்களை வைத்து தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் அந்தப் படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறார்களாம்.
போடா போடி…
Viduthalai 2:…
விடுதலை 2…
Actor karthi:…
அமரன் திரைப்படம்…