சூர்யாவின் மெகா ஹிட் படத்தால் நொந்து போன AVM நிறுவனம்.! தற்போதைய அவல நிலை.!

by Manikandan |
AVM company
X

ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் மிகவும் பழமையான மற்றும் பிரபலமான தயாரிப்பு நிறுவனமாக ஒரு காலத்தில் செயல்பட்டு வந்தது. ஆனால், தற்பொழுது இந்த ஏவிஎம் நிறுவனம் அவ்வளவாக எந்த படங்களையும் எடுப்பதில்லை, அவ்வாறு எடுத்தாலும் பெரிய அளவிலான படங்களை எடுப்பதில்லை.

இதற்கு காரணம் அயன் படத்தை தயாரித்தது தான் என கூறப்படுகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் கே.வி ஆனந்த் அவர்கள் இயக்கத்தில் வெளியாகி வெற்ற பெற்ற திரைப்படம் தான் அயன். இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்திருந்தார்.

சூர்யாவின் அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? பல நாள்  ரகசியம் வெளியானது - Cinemapettai

இந்த படத்தை ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக எம்.சரவணன் மற்றும் எம்.எஸ்.குகன் ஆகியோர் தயாரித்திருந்தனர். இந்த படம் நல்ல வெற்றியை பெற்றது. ஆனால், இந்த படத்தின் நாயகன் மற்றும் இயக்குனர் இரு பக்கமும் தயாரிப்பு நிறுவனத்திற்கு இடையூறு கொடுத்ததாகவும், இதனால் இனி படமே எடுக்க வேண்டாம் என்ற முடிவுக்கெல்லாம் ஏவிஎம் நிறுவனம் சென்றதாகவும் கூறப்படுகிறது.

Surya

இந்த படத்தை வாங்கி வெளியிட்டது சன் பிச்சர்ஸ் நிறுவனம். அதனால், கிடைத்த லாபத்தில் சரியான பங்கு கிடைக்கவில்லையா என தெரியவில்லை. ஏனென்றால், சிவாஜி, அயன் போன்ற பிரமாண்ட படங்களை எடுத்துவிட்டு அதற்கடுத்து பெரிய படங்களில் களமிறங்காமல் இருபப்து கோலிவுட் மட்டுமல்ல இந்திய சினிமா அளவில் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.

Next Story