Cinema History
விசுவுக்கு ஏவிஎம் நிறுவனம் கொடுத்த மிகப்பெரிய கௌரவம்!.. மனுஷன் வாழ்நாள் முழுக்க மறக்கலயாம்!..
பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்தவர் விசு. இயக்குனராவதற்கு முன் பல திரைப்படங்களுக்கும் கதை, வசனம் எழுதியிருக்கிறார். பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினி நடித்து ரசிகர்களை கவர்ந்த தில்லு முல்லு, நெற்றிக்கண் ஆகிய படங்களுக்கு கதை, வசனம் எழுதியது விசுதான். இவரின் சில கதைகளை பாலச்சந்தர் இயக்கியிருக்கிறார்.
சினிமாவுக்கு வருவதற்கு முன் பல நாடகங்களையும் இவர் இயக்கி நடித்திருக்கிறார். ஒருகட்டத்தில் விசுவே அவரின் கதைகளை இயக்க துவங்கினார். பெரும்பாலும் அவர் இயக்கும் படங்களில் அவர் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பார். இவர் எழுதி, இயக்கி, நடித்து முதலில் வெளியான படம்தான் மணல் கயிறு.
இதையும் படிங்க : கேப்டன் செஞ்ச உதவிக்கு இப்படியா விசுவாசத்தை காட்டுவீங்க?… விஜயை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்
எஸ்.வி.சேகர் நடிப்பில் வெளியான இந்தப்படம் இப்போதும் சிலாகித்து பேசப்படுகிறது. இதே படத்தின் இரண்டாம் பாகமும் சில வருடங்களுக்கு முன் வெளியானது. டவுரி கல்யாணம், சம்சாரம் அது மின்சாரம், திருமதி ஒரு வெகுமதி, காவலன் அவன் கோவலன், வீடு மனைவி மக்கள், பெண்மணி அவள் கண்மணி உள்ளிட்ட முக்கிய திரைப்படங்களை இயக்கியவர்.
குடும்ப உறவுகளில் இருக்கும் சிக்கலைத்தான் விசு கதைக்கருவாகவே எடுப்பார். அதனால், தாய்குலங்கள் மத்தியில் விசுவின் படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு எப்போதும் இருந்தது. விசு பல படங்களை இயக்கியிருந்தாலும் அவருக்கு மகுடம் வைத்திருந்தது போல் அமைந்தது சம்சாரம் அது மின்சாரம் படம்தான்.
இதையும் படிங்க: விக்கியை தூக்கி அடிச்சது போல விடாமுயற்சியிலும் வேலையை காட்டிய அஜித்.. என்ன தான் பாஸ் நடக்குது?
மிகவும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சூப்பர் ஹிட் அடித்து வசூலை அள்ளிய படம் இது. இந்த படம் தேசிய விருதையும் பெற்றது. இதனால் மகிழ்ச்சியடைந்த ஏவிஎம் சரவணனன் விசுவுக்கு எதாவது செய்ய வேண்டும் என நினைத்தார். உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள் என விசுவிடம் கேட்க ‘டெல்லியில் நான் தேசிய விருதை வாங்குவதை என் குடும்பத்தினர் பார்க்க வேண்டும்’ என சொல்ல, விமானத்தில் ‘விசு மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு பிஸ்னஸ் கிளாசில் டிக்கெட் போட்டு கொடுத்தார் சரவணன்’.
ஆனால், விமானத்தில் சரவணன் சாதாரண் எக்கனாமிக் சீட்டில் அமர்ந்திருந்தார். இதைப்பார்த்து பதறிய விசு ‘முதலாளி. நான் பிஸ்னஸ் கிளாசில் இருக்கும்போது நீங்கள் இங்கே உட்காரலமா?.. அங்கு வந்து அமருங்கள்’ என பதற், சரவணனோ ‘நீங்கள் ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து எங்களை சந்தோஷப்படுத்தி வீட்டீர்கள். பதிலுக்கு உங்களுக்கு நாங்கள் செய்வது இதுதான். நீங்கள் பிஸ்னஸ் கிளாசில் இருக்கும் போது உங்களின் முதலாளி நான் இங்கே இருந்தால்தான் உங்களை உங்கள் குடும்பத்தினர் உயர்வாக நினைப்பார்கள். இதுதான் நான் உங்களுக்கு கொடுக்கும் கவுரவம்’ என்று சொன்னாராம்.
இந்த சம்பவத்தை விசு நாள் முழுவதும் பல இடங்களில் ‘என் முதலாளி என்ன செய்தார் தெரியுமா?’ என சொல்லிக்கொண்டே இருப்பாராம்.
இதையும் படிங்க: ரஜினி மட்டும்தான் நடிகரா?!. நாங்களாம் படம் எடுக்கலயா?!.. நடிகை விஷயத்தில் கடுப்பான விசு…