பாம்பை வைத்து படம் எடுத்ததுக்கு இப்படி ஒரு வரவேற்பா!... வெளிநாட்டுக்காரனையே அசரடித்த நம்மூர் தயாரிப்பாளர்…
1974 ஆம் ஆண்டு சிவக்குமார், ஜெயசித்ரா, ஜெயசுதா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “வெள்ளிக்கிழமை விரதம்”. இத்திரைப்படத்தை ஆர்.தியாகராஜன் இயக்கியிருந்தார். சான்ட்டோ சின்னப்பா தேவர் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தில் பாம்பு ஒரு முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்தது. ஒரு பாம்பை எப்படி இவ்வளவு நேர்த்தியாக நடிக்க வைத்திருந்தார்கள் என்று பார்வையாளர்கள் வியந்து போனார்கள். மேலும் இத்திரைப்படம் அக்காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
“வெள்ளிக்கிழமை விரதம்” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இத்திரைப்படத்தை ஏவிஎம் நிறுவனத்தார் “நோமு” என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்தனர். “நோமு” திரைப்படத்தை பட்டு என்பவர் பாதி படத்தை இயக்கியிருந்தார். மீதியை ஏவிஎம் குமரன் இயக்கினார். இத்திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் ஏவிஎம் குமரன், “நோமு” திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது “நோமு” திரைப்படத்தை 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட்டார்களாம். பாம்பை வைத்து மிக வித்தியாசமாக படமாக்கப்பட்ட காரணத்தால் இத்திரைப்படத்தை அவர்கள் தேர்வு செய்தார்களாம்.
அதன் பிறகு அப்போதைய சோவியத் ரஷ்ய பகுதியில் ஒன்றாக இருந்த தஜிகிஸ்தான் என்ற பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் “நோமு” திரைப்படத்தை திரையிட்டார்களாம்.
அத்திரைப்படத்தை பார்த்த அந்நாட்டு பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்துப்போனதாம். மேலும் அத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கு ஒன்ஸ் மோர் கேட்டார்களாம். அந்த அளவுக்கு மிகவும் ரசித்து பார்த்து படக்குழுவினரை பாராட்டினார்களாம். இவ்வாறு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏவிஎம் நிறுவனத்தார் பாம்பை வைத்து படம் எடுத்து வெளிநாட்டினரை அசரவைத்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: பாரதிராஜா நிராகரித்த உதவி இயக்குனர்… பின்னாளில் இயக்குனர் இமயமே அசந்துப்போன நடிகர்… யார்ன்னு தெரியுமா?