ரிலீசுக்கு முன்பே தயாரிப்பாளரை மொட்டை அடிக்க வைத்த விக்ரம் படம்!... அடப்பாவமே...

தமிழ் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு நடிகராக மாறியவர் விக்ரம். பள்ளியில் ஒரு ஆங்கில் நாடகத்தில் நடித்தபோது அவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது. கல்லூரி படிப்புக்கு பின் பல வருடங்கள் போராடினார். ஆனால், சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. மீரா, தந்து விட்டேன் உன்னை உள்ளிட்டசில படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் ஓடவில்லை.

நல்ல வாய்ப்புக்காக காத்திருந்த போதுதான் சேது படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் விக்ரம். படமும் வெற்றியைடைந்தது. அதன்பின் தில், தூள் என தொடர் ஹிட் படங்களை கொடுத்தார். ஹரியின் இயக்கத்தில் அவர் நடித்து வெளியான சாமி படத்தின் வெற்றி விக்ரமை முன்னணி நடிகராக மாற்றியது.

இதையும் படிங்க: ஒரு வாரத்தில் படம் ரிலீஸ்!.. இளையராஜா செய்த மேஜிக்!.. வசூலை அள்ளிய விஜயகாந்த் படம்!..

அதன்பின் பல திரைப்படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியிருக்கிறார். சினிமாவுக்கு வருவதற்கு முன் பிரசாந்த், அஜித், அப்பாஸ், வினித் போன்ற நடிகர்களுக்கு டப்பிங் கொடுத்து வந்தார். தமிழில் வாய்ப்பு இல்லாமல் மலையாள படங்களில் ஹீரோக்களின் தம்பியாக நடித்து வந்தார்.

சேது படம் அவரின் வாழ்க்கயை மாற்றியது. அதோடு, பிதாமகன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதும் வாங்கினார். ஷங்கரின் இயக்கத்தில் உருவான ஐ படத்தில் உடலை உருக்கி நடித்திருந்தார். மணிரத்னத்தின் இயக்கத்தில் விக்ரம் நடித்த பொன்னியின் செல்வன் படமும் சூப்பர் ஹிட் ஆனது.

இதையும் படிங்க: குணா படத்தை பார்த்துவிட்டு இயக்குனரிடம் ரஜினி கேட்ட கேள்வி!.. மனுஷனுக்கு இவ்வளவு ஆசையா!..

சரணின் இயக்கத்தில் விக்ரம் நடித்து 2002ம் வருடம் வெளியான திரைப்படம்தான் ஜெமினி. இந்த படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தில்தான் நடிகை கிரண் அறிமுகமானார். இந்த படத்திற்கு சரணின் ஆஸ்தான இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற ‘ஓ போடு’ பாடலுக்காகவே இப்படம் ஓடியது என்றுதான் சொல்ல வேண்டும்.

gemini

இந்த படம் தயாரிப்பில் இருந்தபோது ஏவிஎம் சரவணனுக்கு படத்தை நினைத்து பயமே வந்துவிட்டதாம். படம் தோல்வி அடைந்துவிட்டால் என்ன செய்வது என பயந்த அவர் தனது குழுவை அழைத்துக்கொண்டு திருப்பதி சென்று எல்லோரும் மொட்டை போட்டிருக்கிறார்கள். பட ரிலீஸுக்கு முன்பே தயாரிப்பாளரை மொட்டை போட வைத்த படம்தான் ஜெமினி.

 

Related Articles

Next Story