ரஜினிக்கே படம் பண்ண முடியாதுன்னு திமிர் காட்டிய ஷங்கர்!.. தயாரிப்பாளருக்கும் கதை சொல்ல மாட்டாராம்!..

ஜென்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஷங்கர் காதலன், இந்தியன், ஜீன்ஸ், பாய்ஸ், முதல்வன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பிரம்மாண்ட இயக்குனராக அப்போதே அறியப்பட்டார். தனது முதல் படத்திலிருந்து மிகப்பெரிய வெற்றியை தமிழ் சினிமாவுக்கு தந்து வந்த ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சிவாஜி படத்தில் தான் இணைந்தார்.

ஏவிஎம் தயாரிப்பில் வெளியான சிவாஜி திரைப்படத்தில் முதலில் ஷங்கர் ரஜினிகாந்தை இயக்குவாரா? மாட்டாரா? என்கிற கேள்வியே இருந்ததாக ஏவிஎம் சரவணன் சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: ரொம்ப நாளைக்கு பிறகு வெளியே வரும் கார்த்திக்! உண்மையிலேயே அவருக்கு என்னதான் ஆச்சு?

பெரிய பிக்சர் பண்ண வேண்டும் என ரஜினிகாந்த் தன்னிடம் சொன்னபோது பெரிய பிக்சர் என்றால் ஷங்கர் தான் சரியாக இருப்பார் என்றேன். ஷங்கர் நமக்கு பண்ணுவாரா தெரியலையே சார் என ரஜினிகாந்த் கூறினார். நான் பேசி பார்க்கிறேன் சார் என்றேன். முதலில் வேண்டாம் தயங்கிய ரஜினிகாந்த், பின்னர் பார்க்க சொன்னார். ஷங்கருடன் மீட்டிங் அரேஞ்ச் பண்ண நிலையில், உடனே ரஜினிகாந்த் போன் செய்து, சார் கேட்க வேண்டாம் ஒருவேளை அவர் மறுத்து விட்டால் எனக்கு கஷ்டமாகிவிடும் என்றார்.

அதெல்லாம் ஒன்னும் இல்ல சார் ஷங்கர் அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்துவிட்டது. நாளை காலை குகன் போய் பேசி விடுவார் என்றேன் அப்போ ஓகே சார் பேசுங்கள் என ரஜினி சொன்னார்.

இதையும் படிங்க: அச்சச்சோ ஜாக்கி சான் படத்துக்கு இப்படியொரு டைட்டிலா?.. அந்த வயசான தோற்றம் படத்துக்கான கெட்டப்பா?..

அடுத்த நாள் நானும் ஷங்கரும் ராகவேந்திரா மண்டபத்தில் இருக்கிறோம். நீங்க வந்தா நல்லா இருக்கும் என்றார். வெறும் 1001 ரூபாய் தான் அட்வான்ஸ் கொடுத்தேன். ரஜினிக்கும் ஷங்கருக்கும் அப்படி தொடங்கியது தான் சிவாஜி படம்.

தயாரிப்பாளருக்கு கதை சொல்லிடுங்க என ரஜினிகாந்த் ஷங்கரிடம் சொல்லியிருக்கிறார். ஆனால், அவர் நான் இதுவரை எந்த தயாரிப்பாளருக்கும் கதை சொன்னது கிடையாது என மறுத்து விட்டார். ரஜினி கொஞ்சம் ஃபோர்ஸ் செய்ய வேண்டுமென்றால் டேப்பில் ரெக்கார்டு செய்து அனுப்புகிறேன். அதை கேட்டு விட்டு காப்பி எடுக்காமல் கொடுக்க உத்தரவிட்டார். நானும் ஜென்டில்மேனாக கேட்டு விட்டு அப்படியே அதை திருப்பி அனுப்பி விட்டேன் என சிவாஜி படத்தில் நடந்த விஷயங்களை எல்லாம் ஏவிஎம் சரவணன் புட்டு புட்டு வைத்துள்ளார்.

 

Related Articles

Next Story