#image_title
ஏவிஎம் தயாரிப்புல முதல் முறையாக இளையராஜா மியூசிக் அமைச்ச படம் முரட்டுக்காளை. படத்தின் தயாரிப்பாளர் ஏவிஎம்.சரவணன் இந்தப் படத்தில் இளையராஜாவுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து என்ன சொல்றாருன்னு பாருங்க…
முரட்டுக்காளை படத்தின்போது எனக்கும், இளையராஜாவுக்கும் பிரச்சனை… டிரெய்ன்ல ரஜினி வில்லனோட பைட் பண்ற சீன். படத்தோட ரஷ் காபி பார்க்கும்போது எனக்கு ரொம்ப திரில்லிங்கா இருந்தது. படத்துல இதுதான் ஹைலைட்னு என் மனசுல பட்டது.
ஒவ்வொரு ரீ ரெக்கார்டிங் கம்போஸ் பண்ணும்போதும் நான் மிக்ஸிங் ரூம்ல உள்ளே உட்கார்ந்துருவேன். அங்கே வாசிக்கிறதை நான் கேட்பேன். அது எனக்கு சரிபட்டு வரலன்னா நான் சொல்வேன். சார் இந்த இடம் சரியா மேட்ச் ஆகலன்னு நான் சொல்வேன். இளையராஜா அதுக்கு ஒத்துழைப்பாரு. இந்த டிரெய்ன் சீன் வரும்போது அன்னைக்கு அவர் ஒரு அவசர மூடுல இருந்தாரு.
இதை முடிச்சிட்டா போச்சு. இதோ ஓவர்னு நினைச்சாரு. அந்த டிரெய்ன் பைட் வரும்போது இதுக்கு வந்து மியூசிக் வேண்டாம். அந்த டிரெய்ன் சவுண்டு, பைட்டிங் சவுண்டுக்கு அந்த பஞ்ச் சவுண்டைப் போட்டுடுங்க போதும்னு சொல்லிட்டாரு. அது படத்துல 600 அடிக்கு நீளமான பைட். பாலத்து மேல அங்க இங்கன்னுலாம் ரஜினி போவாரு. டிரெய்ன் மேல நின்னு பைட் பண்ணுவாரு. அன்னைக்கு அது ரொம்ப புதுமை. டெக்னாலஜி வராத காலகட்டம்.
avm saravanan murattukkalai
எஸ்.பி.முத்துராமன் சாரும், கேமராமேனும் அருமையா படப்பிடிப்பை நடத்திருந்தாங்க. என்ன இந்த பைட்டுக்கு இளையராஜா மியூசிக் வேணாம்னு சொல்லிட்டாருன்னு எனக்கு நெருடலாகவே இருந்தது. அப்போ எடிட்டர் விட்டல். அவரை வரச்சொல்லி இளையராஜா மியூசிக் போடாத விஷயத்தைப் பற்றிச் சொன்னேன். சார் இதுக்கு மேட்ச்சா வேற மியூசிக்கை ரெடி பண்ணிக் கொண்டு வாரேன். உங்களுக்கு ஓகேன்னா அதைப் பண்ணிடலாம்னாரு.
அதே மாதிரி அவரு அந்த சீனையும் இளையராஜா ஏற்கனவே போட்ட ஒரு மியூசிக்கையும் கொண்டு வந்து புரொஜக்டர்ல அந்த சீனைப் போட்டு மியூசிக்கையும் ஓடவிட்டாரு. அது மேட்ச்சா இருந்தது. அப்படியே பண்ணிருங்கன்னு சொன்னேன். அது தான் படத்துல வர்ற மியூசிக். ஆனா படத்துல அவர் போடாத மியூசிக். ஆனா ஏற்கனவே எப்பவோ அவர் போட்ட ஒரு மியூசிக் தான் அது. இளையராஜா அதைப் பற்றி ஒண்ணும் சொல்லலை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Dragon: கோமாளி…
2020ம் ஆண்டு…
Rajinikanth: சினிமா…
Siragadikka Aasai:…
நடிகை எமி…