ஹிந்தியில் மட்டையை போட்ட படம்!.. ஏவிஎம் கையாண்ட புது டிரிக்.. தமிழில் தாறுமாறாக ஓடி சாதனை..

தமிழ் சினிமாவில் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமாக இன்றளவும் பெருமைக்குரிய ஒரு நிறுவனமாக இருப்பது ஏவிஎம். பாகவதர் முதல் இன்றைய இளம் தலைமுறையினர் வரை அனைத்து முன்னனி நடிகர்களையும் வைத்து பல வெற்றிப் படங்களை கண்ட நிறுவனம் தான் ஏவிஎம்.

avm1

avm

ஏவிஎம் மெய்யப்பச்செட்டியார் என்றால் அனைவர் மத்தியிலும் ஒரு நல்ல மரியாதையுடன் இருந்தவர். அவருக்கு பின் அவரது மகன்களான குமரன், சரவணன் ஆகியோரும் அவரது தந்தையை பின்பற்றியே வருகின்றனர். அதிலும்
குறிப்பாக ஏவிஎம் சரவணன் ரஜினி, கமலை வைத்து பல படங்களை கொடுத்து வெற்றிப் பாதையில் பயணித்தவர்.

இந்த நிலையில் ஏவிஎம் சரவணன் ஒரு சமயம் மும்பை சென்றிருந்த போது வழியில் ஒரு பட போஸ்டரை பார்த்திருக்கிறார். பார்த்ததுமே பிடித்துப் போக அந்த கார் டிரைவரிடம் கதையை கேட்டு தெரிந்திருக்கிறார். ஒரு ஊமை பையனை மையமாக வைத்து அமைந்த படம். கதை மிகவும் பிடித்துப் போக அதன் தமிழ் உரிமையை வாங்க போனாராம் சரவணன்.

avm2

ramu

ஆனால் அவருக்கு முன்பாக தென்னிந்திய சினிமாவில் இருந்து ஒருவர் வாங்கி விட்டதாக தெரிவிக்க அது வீனஸ் பிக்சர்ஸில் உறுப்பினராக இருந்த சுப்பிரமணி என்பவர் வாங்கினார் என்று தெரியவந்திருக்கிறது. அதோடு விட்டுவிட்டாராம் சரவணன். சுப்பிரமணி அந்த உரிமையை எடுத்துக் கொண்டு வீனஸ் உரிமையாளரான கிருஷ்ணமூர்த்தியிடம் சொல்லியிருக்கிறார்.

அவரோ இந்தப் படம் கண்டிப்பாக ஓடாது, ஏன் வாங்கி வந்தாய் என்று கேட்டதும் சுப்பிரமணி அந்த உரிமையை ஏவிஎம் சரவணனிடமே கொடுத்து தான் 10000 ரூபாய்க்கு வாங்கியதாகவும் தாங்கள் கூடுதலாக 5000 ரூபாய் தந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் சொல்லியிருக்கிறார். ஏவிஎம் சரவணனுக்கு அளவில்லா மகிழ்ச்சி. தான் தேடிப் போனது இப்பொழுது தன்னையே தேடி வந்திருப்பதை நினைத்து வாங்கிவிட்டார்.

avm3

avm3

ஏவிஎம் சரவணன் இந்தக் கதையை கதாசிரியரான ஜாவர் சீதாராமனிடம் சொல்லியிருக்கிறார்.அவரும் இந்தப் படத்தில் எம்ஜிஆர் நடித்தால் கூட ஓடாது என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு சரவணன் இந்தப் படத்தில் முழுக்க ஊமையாக வரும் பையனை பாதியில் ஊமையாக காட்டி, எப்படி ஊமையாக மாறினான் என்று சொன்னால் கண்டிப்பாக இந்தப் படம் ஓடும் என்று சொல்லியிருக்கிறார்.

இதைக் கேட்டதும் ஜாவர் சீதாராமன் ‘என்ன ஒரு யோசனை? எனக்கு கூட அது தோணல’, இப்படியே எடுத்தால் படம் மாபெரும் வெற்றியாகும் எனச் சொல்லியிருக்கிறார். அதன் பிறகு தயாரிக்கப் பட்ட படம் தான் ‘ராமு’. ஜெமினி , கே.ஆர்.விஜயா நடிப்பில் உருவான இந்தப் படம் தமிழில் 100 நாள்களை கடந்தும் தெலுங்கில் வெள்ளி விழா படமாகவும் ஓடி சாதனை படைத்தது.

 

Related Articles

Next Story