அவர் மீது இப்படி ஒரு காதலா? ‘அவ்வைசண்முகி’ பெயருக்கு பின்னாடி கமலுக்கு இப்படி ஒரு ப்ளாஷ்பேக்கா?
தமிழ் திரையுலகில் கமல்ஹாசனை போன்ற ஒரு மாபெரும் நடிகரை பார்ப்பது என்பது மிகவும் அரிது. சினிமாவைப் பற்றிய அத்தனை நுணுக்கங்களையும் தன் கைவிரல் நுனியில் வைத்து சுற்றி கொண்டிருக்கும் ஒரு உன்னதமான கலைஞன் கமல். நடிப்பிற்காக தன்னையே வருத்திக் கொள்ளும் நடிகர்களில் முதன்மையான நடிகராக திகழ்கிறார் கமல்ஹாசன்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று 60 வயதை கடந்தும் இளம் தலைமுறை நடிகர்களுக்கு டப் கொடுக்கும் நடிகராக திகழ்ந்து வருகிறார். பலவித கெட்டப்புகளை போட்டுக்கொண்டு ரசிகர்களை பிரமிக்க வைப்பதில் கில்லாடியாக திகழ்பவர் கமல்ஹாசன். தசாவதாரம், மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி, ஆளவந்தான் ,ஹேராம் போன்ற எண்ணற்ற படங்கள் இவரின் வித்தியாசமான வேடங்கள் ஏற்று நடித்த படங்களுக்கு உதாரணங்களாகும்.
இதையும் படிங்க : வடிவேலு உனக்கு தில் இருந்தா விஜயகாந்துகிட்ட நேர்ல இத கேட்பியா?!.. சவால் விட்ட பொன்னம்பலம்!…
குறிப்பாக இவர் பெண் வேடத்தில் நடித்த அவ்வை சண்முகி படம் இன்றளவும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட படங்களில் முதல் லிஸ்டில் இருக்கும் படமாகும். நகைச்சுவை கலந்த இந்த அவ்வை சண்முகி படத்தில் இரண்டு கெட்டப்புகளில் கமல் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருப்பார்.
இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக மீனா நடிக்க கூடவே ஜெமினி கணேசன், டெல்லி கணேஷ், நாகேஷ், ஹீரா போன்ற பல நடிகர்கள் நடித்து வெளியான படமாகும். இந்த நிலையில் இந்தப் படத்திற்கு அவ்வை சண்முகி என்று எப்படி பெயர் வந்தது என்பதை பிரபல சினிமா தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : 100வது படத்தில் ஃபிளாப் கொடுத்த ஜெமினி கணேசன் – சாவித்ரி!.. இப்படி ஆகிப்போச்சே!…
நாடக உலகில் தலைசிறந்த நாடக குழுவாக இருந்தது டி.கே சகோதரர்கள் நாடகக்குழு. இந்த நாடகக் குழுவில் நான்கு சகோதரர்கள் பொறுப்பேற்று அந்த நாடகக் குழுவை நடத்திக் கொண்டு இருந்தார்களாம். மூன்றாவது சகோதரராக இருந்தவர் தான் டி.கே.சண்முகம். இவர் நாடக குழுவில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்தவர் தான் கமலாம். கமலுக்கு டி.கே.சண்முகத்தின் மீது எப்பொழுதுமே அதிக அன்பு கொண்டவராகவே இருப்பாராம். அவர் மீது அன்பும் மரியாதையும் அக்கறையும் கொண்டு விலங்கினாராம் கமல். அவரின் நினைவாகவே இந்த படத்திற்கு அவ்வை சண்முகி என்று பெயர் வைத்தாராம் கமல்.