ஒரு வழியா அந்த பிரம்மாண்ட சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் ஆகப்போகுது… எப்போன்னு தெரியுமா?

Sivakarthikeyan
சிவகார்த்திகேயன் தற்போது “மாவீரன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் மிஷ்கின் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை “மண்டேலா” இயக்குனர் மடோன்னே அஸ்வின் இயக்கி வருகிறார்.
“மாவீரன்” திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், கமல்ஹாசனின் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸுடன் கைக்கோர்க்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த “அயலான்” திரைப்படத்தை குறித்து ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், “அயலான்” திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளிவந்தது. அதனை தொடர்ந்து சில காரணங்களால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது. எனினும் 2018 ஆம் ஆண்டு இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அதன் பின் கடந்த 2021 ஆம் ஆண்டு இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

இத்திரைப்படம் சைன்ஸ் பிக்சன் திரைப்படம் என்பதாலும் இது ஒரு ஏலியனை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை என்பதாலும் இதில் கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக இருந்தது. ஆதலால் பல மாதங்களாக கிராபிக்ஸ் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் வெளியீடு குறித்தான ஒரு சூடான தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது வருகிற தீபாவளி என்று “அயலான்” திரைப்படம் வெளிவரவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எடிட்டரை போட்டு படாத பாடு படுத்திய ராகவா லாரன்ஸ்… ஒரு படம் ஓடுறதுக்கு என்னென்னலாம் பண்ண வேண்டியதா இருக்கு?