Connect with us
ayalan

Cinema News

12 நாளில் இத்தனை கோடி வசூலா?!.. வசூலில் அடிச்சி தூக்கிய அயலான்!..

Ayalan: இன்று நேற்று நாளை படம் தமிழில் ஒரு சயின்ஸ் பிக்சன் கதையாக வெளிவந்து ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் அப்படத்தின் இயக்குனர் ரவிக்குமாரை செல்போனில் அழைத்து பாராட்ட ‘சார் உங்களுக்கு ஒரு கதை இருக்கு.. நடிக்கிறீங்களா?’ என கேட்க அப்படி துவங்கிய படம்தான் அயலான்.

ஆனால், இந்த படத்தின் வேலை துவங்கி 4 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இடையில் இந்த படத்தை விட்டுவிட்டு சிவகார்த்திகேயன் வெவ்வேறு படங்களுக்கு நடிக்கப்போனார். கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு, இஷா கோபிகர்,பானுப்பிரியா என பலரும் நடித்திருந்தனர்.

இதையும் படிங்க: உள்ளூர்ல வேணுனா அம்பானியா இருக்கலாம்! வெளியூர்ல.. ரஜினியை வம்புக்கிழுத்த பார்த்திபன்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ஏலியன் ஒன்று பூமியை காப்பாற்ற வருவது போலவும், அதற்கு சிவகார்த்திகேயன் எப்படி உதவி செய்கிறார் என்பதையும் ரவிக்குமார் அழகாக திரைக்கதை அமைத்திருந்தார். இப்படத்தில் வி.எப்.எக்ஸ் காட்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் இருந்தது.

இந்த படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி கடந்த 12ம் தேதி உலகமெங்கும் வெளியானது. படம் சூப்பர் இல்லை என்றாலும் ஓகே என்கிற அளவுக்கு இப்படத்தின் விமரசனங்கள் இருந்தது. ஒருபக்கம் ஏலியன் கான்செப்ட் என்பதால் குழந்தைகளை அழைத்துகொண்டு பெரியவர்களும் தியேட்டருக்கு சென்று இப்படத்தை பார்த்து ரசித்தனர்.

இதையும் படிங்க: லோ பட்ஜெட் படமா? அதுவும் நானா? கனா இயக்குனருக்கு நடந்த விபரீதம்.. அன்னபூரணி என்னம்மா நீங்க?

இதன் காரணமாக இப்படம் நல்ல தமிழகத்தில் நல்ல வசூலை பெற்றது. இந்நிலையில், படம் வெளியாகி 12 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அயலான் படம் உலகம் முழுவதும் சேர்த்து 75 கோடியை வசூல் செய்துள்ளதாக அப்படத்தை தயாரித்த கேஜிஆர் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

notice

இப்படம் வெற்றி பெற்றதால் அயலான் 2 பட வேலைகளும் துவங்கியுள்ளது. விரைவில் இப்படத்தின் அறிவிப்பும் வெளியாகவுள்ளது. இந்த செய்தி சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஓவரா இருக்கு.. அடக்கி வாசி!. ஷுட்டிங் ஸ்பாட்டில் ஜெயலலிதாவை கண்டித்த எம்.ஜி.ஆர்…

google news
Continue Reading

More in Cinema News

To Top