போஸ்டர் காசு கூட வரல!.. புலம்பும் திரையுலகம்!.. வசூலில் மண்ணை கவ்விய அயலான்!..

Ayalaan movie: தமிழ் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் மட்டுமில்லை மும்பை, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் பல வெளிநாடுகளிலும் தமிழிலேயே வெளியாவதுண்டு. மற்ற மாநிலங்களில் எப்படியோ ஆனால் தமிழ் திரைப்படங்கள் கேரளாவில் நல்ல வரவேற்பை பெறும். குறிப்பாக ரஜினி, விஜய் ஆகியோரின் படங்களுக்கு அங்கே நல்ல வரவேற்பு உண்டு.
அதேநேரம், ஒரு நல்ல வினியோஸ்தரிடம் படத்தை கொடுத்து நல்ல தியேட்டர்களில் படங்களை வெளியிட வேண்டும். இல்லையேல் வசூல் கிடைக்காது. இதில் சொதப்பிவிட்டால் போணி ஆகாது. சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அயலான். இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் மற்றுமொரு சயின்ஸ் பிக்சன் கதையாக இப்படம் வெளியானது.
இதையும் படிங்க: மௌனம் சாதிக்கும் கமல்!… விஜய் சேதுபதி, யோகி பாபு பக்கம் சாய்ந்த ஹெச்.வினோத்… என்ன நடந்தது?
கடந்த 4 வருடங்களாக இப்படத்தின் வேலைகள் நடந்து வந்தது. இப்படத்தில் கருணாகரன், யோகிபாபு, ரகுல் ப்ரீத் சிங் என பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ஆனால், இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. இந்நிலையில்தான் இந்த படம் கடந்த 12ம் தேதி வெளியானது.
விஜய் போல குழந்தைகளுக்கு பிடித்த ஹீரோவாக சிவகார்த்திகேயன் இருக்கிறார். அதோடு, ஏலியன் தொடர்பான சயின்ஸ் பிக்சன் கதை என்பதால் குடும்பத்துடன் இப்படத்திற்கு ரசிகர்கள் போவார்கள். அதோடு, தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறையில் வசூல் அள்ளும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க: உருட்டு உருட்டு!.. கேப்டன் மில்லர் வசூலை பங்கம் செய்த புளூசட்ட மாறன்..
ஆனால், படம் பெரிய வசூலை பெறவில்லை என்றே பலரும் சொல்கிறார்கள். அதுவும் கேரளாவில் அயலான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மண்ணை கவ்வி விட்டது. கேரள வினியோகஸ்தர் இப்படத்தை ரூ.75 லட்சம் கொடுத்து வாங்கியிருக்கிறார். ஆனால், போஸ்டர் அடித்த செலவு கூட இப்படம் வரவில்லையாம். கேரளாவில் மிகப்பெரிய தோல்விப்படமாக அயலான் மாறியிருக்கிறது.
இத்தனைக்கும் இதுவரை இல்லாத அளவுக்கு கேரளாவில் 103 தியேட்டர்களில் திரையிடப்பட்ட சிவகார்த்திகேயன் படம் இதுதான். ஆனால், என்ன காரணமோ இப்படம் அங்கே போனி ஆகவில்லை. இது படத்தை வாங்கிய வினியோகஸ்தருக்கு பெரும் நஷ்டத்தை கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: என்னையே வாடா கலாய்க்கிறீங்க? அந்த விஷயமே வேண்டாம்!… தலைவர்171 படத்தில் யூடர்ன் போட்ட ரஜினிகாந்த்!…