Connect with us
ayalan

Cinema News

அயலான் படத்துக்கு ஆப்பு வச்ச விஜய் பட புரடியூசர்!.. புலம்பி தவிக்கும் எஸ்.கே…

Ayalan movie: சிவகார்த்திகேயன் நடிகராக இருந்தவரை அவருக்கு எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. எப்போது பினாமி பெயரில் தயாரிப்பளராக மாறினாரோ அப்போதுதான் அவருக்கு ஏழரை துவங்கியது. அவர் தயாரிப்பில் வெளியான படங்கள் வசூலை பெறாமல் போக 100 கோடி வரை கடனாளி ஆனார்.

அதன்பின் அவர் நடிக்கும் படங்களில் சம்பளத்தில் ரூ.25 கோடியை 4 படங்களுக்கு கொடுக்கிறேன் என ஃபைனான்சியர்களிடம் ஒப்புக்கொண்டார். ஒரு படத்திற்கு மட்டுமே அப்படி கொடுத்த சிவகார்த்திகேயன் அதன்பின் உதயநிதி ஸ்டாலின் மூலம் காயை நகர்த்தி அதிலிருந்து தப்பித்து வந்தார்.

இதையும் படிங்க: ஸ்கூல்ல படிக்கும்போதே வள்ளலாக இருந்த விஜயகாந்த்!.. அப்பாவின் கோபத்துக்கு ஆளான கேப்டன்..

அதாவது, உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் தனது படத்தை ரிலீஸ் செய்தால் பணத்தை கேட்டு பஞ்சாயத்துக்கு வரமாட்டார்கள் என்பதுதான் அவரின் கணக்கு. ஒருபக்கம், அவரின் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் வருகிற வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளது. ஆனால், நீதிமன்றத்தில் இப்படத்தின் மீது 4 வழக்குகள் இருக்கிறது. அது கூட நீதிமன்றத்துக்கு வெளியே செட்டில்மெண்ட் செய்து விடுவார்கள்.

ayalan

ஒருபக்கம், அயலான் படம் ரிலீஸில் ஃபைனான்சியர்கள் மூலம் பிரச்சனை வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம், இப்படம் ஆந்திராவிலும் வெளியாகவுள்ளது. ஆனால், அதற்கும் இப்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பொங்கலுக்கு ஆந்திராவில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகவுள்ளது. எனவே, அயலான் படத்தை பொங்கலுக்கு வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது.

இதையும் படிங்க: விஜயகாந்த் 120 முறை பார்த்து ரசித்த அந்த திரைப்படம்!.. வெறித்தனமான ரசிகரா இருந்தி்ருக்காரே!..

இதில், ரவி தேஜாவின் ‘ஈகிள்’ படமும் ஒன்று. ஆனால், இப்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோய்விட்டது. எனவே, அயலான் படத்தை ஆந்திராவில் ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடந்தது. ஆனால், தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு ‘பொங்கலுக்கு தமிழ் படம் எதுவும் ஆந்திராவில் ரிலீஸ் செய்ய முடியாது’ என அறிவித்துவிட்டார்.

ஒருபக்கம் அயலான் படம் வெளியாகுமா? அப்படியே வெளியானாலும் அப்படம் கல்லா காட்டி லாபத்தை கொடுக்குமா என்கிற கலக்கத்தில் இருக்கிறார்களாம். அதோடு, அயான் படத்தின் ஓடிடி உரிமையும் கூட அவர்கள் எதிர்பார்த்த விலைக்கு போகவில்லை என சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: அரசியல்வாதிகளுக்கு வாழ்க்கை கொடுக்கிறது இல்லப்பா!… ராதிகா பையனிடம் திமிராக பேசிய வடிவேலு!…

google news
Continue Reading

More in Cinema News

To Top