அயன் படத்தில் இந்த கேரக்டர் நான் நடிக்க வேண்டியது… இயக்குநர் சொல்லி மறுத்துவிட்டேன்… ஷாக்கிங் நியூஸ் சொன்ன நடிகர்!

கோலிவுட்டில் ஹிட் படங்களில் முக்கியமானது தான் அயன். கே.வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகிய இப்படத்தில் சூர்யா நடித்திருந்தார். இவருடன் காமெடி நடிகர் ஜெகன், தமன்னா, பிரபு ஆகியோர் நடித்திருந்தனர். படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார்.

மாஸ் ஆக்‌ஷன் காட்சிகளில் படம் சக்கை ஹிட் அடித்தது. கேங்ஸ்டர் கதையாக அமைந்த இப்படத்தில் சூர்யாவுடன், ஜெகனும் முக்கிய வேடம் ஏற்று இருந்தார். நண்பனாக நடித்து சூர்யாவின் ரகசியங்களை தெரிந்து கொண்டு வில்லனிடம் சொல்லும் கதாபாத்திரமாக நடித்திருத்தார்.

இதையும் படிங்க: விஜயோட சம்பளம் இவ்ளோதானா? மனுஷன வேற மாதிரி நினைச்சுட்டோமே – உண்மையை போட்டுடைத்த மன்சூர்

விளம்பர இயக்குனரான அவர் இனி சினிமாவில் நடிக்காமல், விளம்பரம் இயக்கலாம் என்ற முடிவில் இருந்து இருக்கிறார். அப்போது அவருக்கு கே.வி.ஆனந்திடம் இருந்து கால் வந்து இருக்கிறது. அயன் படத்தில் ஜெகன் கேரக்டரில் கிருஷ்ணாவை கேட்டு இருக்கின்றனர்.

இதையும் படிங்க: ”குடிக்க மாட்டேனே என்னப்பண்ணுவ” வைரல் விளம்பரத்தில் நடித்த சுட்டி இந்த நடிகரின் மகனா? அடடே!

அதைபோல, கே.வி.ஆனந்தினை நேரில் பார்த்து இதை சொல்லி தான் மிஸ் செய்து விட்டதாக வருத்தப்பட்டு இருக்கிறார். பில்லா படத்திலும் சந்தானம் நடித்த கேரக்டரும் தனக்கு வந்தது தான் எனவும் ஒரு ஷூட்டிங் காரணமாக அதையுமே மிஸ் செய்து விட்டேன் எனக் கூறிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

Related Articles
Next Story
Share it