அழகி பட ஹீரோவா இது?.. இப்ப என்ன பண்ணிட்டு இருக்காரு தெரியுமா?.. ஆளே மாறிட்டீங்களே?..

sathish
2002 ஆம் ஆண்டு தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளிவந்த படம் அழகி. இந்தப் படத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ் ,தேவயானி போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர். இரண்டரை கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. பார்த்திபனின் கெரியரில் அழகி திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இந்தப் படத்தின் கதைப்படி பார்த்திபன் சண்முகம் என்ற கதாபாத்திரத்திலும் நந்திதா தாஸ் தனலட்சுமி என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார்கள் .சிறு வயதில் இருக்கும்போது இருவரும் ஒருவருக்கொருவர் காதலிப்பதாக இந்த படம் ஆரம்பிக்கும். சுமாராக படிக்கும் தனலட்சுமியை பலமுறை ஆசிரியர்களிடமிருந்து காப்பாற்றி சண்முகம் தனலட்சுமியின் மனதை ஆட்கொள்வார். இருவரும் காதலிக்க தொடங்க திடீரென குடும்பச் சூழ்நிலை காரணமாக தனலட்சுமியும் சண்முகமும் பிரிய நேரிடும். காலங்கள் போக தனலட்சுமி ஒரு ஏழை குடியானவனை திருமணம் செய்வார்.பார்த்திபனோ நன்றாக படித்து நல்ல வசதி படைத்த வளர்மதி என்ற தேவயானியை திருமணம் செய்வார் .

sathish1
ஒரு சூழலில் பார்த்திபன் நந்திதா தாஸை பார்க்க, அவரை தன் வீட்டிற்கு வேலைக்கார பெண்மணியாக அழைத்துச் செல்வார் .அதன் பின்னர் பார்த்திபன் குடும்பத்தில் ஏற்படும் மாறுதல்களே இந்த படத்தின் முடிவாகும். இதில் பார்த்திபன் கதாபாத்திரத்தில் சிறு வயது பார்த்திபனாக நடிகர் சதீஷ் நடித்திருப்பார் .இந்த ஒரு படத்தில் மட்டுமே நடித்த சதீஷ் தற்போது பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.
அவரைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் அழகி படத்தில் நடித்த சதீஷா இவர்? என்று ஆச்சரியப்படும் அளவிற்கு முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார். மேலும் அழகி படத்திற்கு பிறகு வேறு எந்த பட வாய்ப்புகளும் சதீஷை தேடி வரவில்லையாம் .அது மட்டும் இல்லாமல் பரத் நடித்த காதல் திரைப்படமும், தனுஷ் நடித்த தேவதையை கண்டேன் என்ற படமும் சதீஷ் நடிக்க வேண்டிய படங்களாம்.

sathish
ஆனால் என்ன காரணமோ என்று தெரியவில்லை ஆடிசன் வரை சென்று தேர்வாகி அதன் பிறகு என்னை விலக்கி விட்டார்கள் என்று சதீஷ் கூறினார். மேலும் பெரிய இயக்குனர்கள் வந்து அழைத்தாலும் தனக்கு முக்கியமான கதையாக இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்றும் கூறியிருக்கிறார். தற்போது நண்பர்களுடன் சில பிசினஸ்களை கவனித்துக் கொண்டு வருகிறாராம் சதீஷ்.
இதையும் படிங்க : மீண்டும் நேருக்கு நேர் போட்டி… மோதப்போகும் விஜய்-அஜித் படங்கள்…. மாஸ் பிளான் ரெடி…