More
Categories: Cinema News latest news

22 வருடங்களுக்குப் பிறகு வரும் அழகி… படத்தோட வெற்றிக்கு பார்த்திபன் சொல்ற காரணத்த பாருங்க!..

அழகி படம் இன்று ரீரிலீஸ் ஆகிறது. இதற்கான பிரஸ்மீட்டில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா…

தங்கர்பச்சானின் கதைகளங்கள் எல்லாமே புதுசா இருக்கும். இந்தப் படத்தை அவரை விட உலகத்தில் வேறு யாராலும் வெற்றி பெற வைத்திருக்க முடியாது. ஒரு நல்ல படம் எடுக்க என்னை விட்டா வேற யாராவது இருக்காங்களா சொல்லுங்க சார்னு எங்கிட்டேயே தங்கர்பச்சான் கேட்பாரு.

Advertising
Advertising

உண்மையைப் பேசறதுக்கு மரியாதையே இருக்காது. காதலிக்கிற பெண்ணோட பேரு வேணா எல்லாருக்கும் வேற வேறயா இருக்கும். ஆனா எல்லோருக்கும் அவள் அழகி தானே. அந்த அழகிங்கறது அழக சொல்ற விஷயம் இல்ல. இவனோட மனசோட அழகு. உலகம் பூராவும் இருக்குற காதலர்கள் காதலை இன்னும் எவ்வளவு அழகா கைக்குள்ள வச்சிருக்காங்க, காதலை இன்னும் எவ்வளவு மதிப்பா வச்சிருக்காங்கங்கறதுக்கு ஒரு சான்று தான் 22 வருஷம் கழிச்சி ரிலீஸாகற இந்த அழகிக்கான இன்னமும் எதிர்பார்ப்பு. அதுதான் உண்மை.

Parthiban

காதலனோ காதலியோ பொய். ஆனா காதல் மட்டும் தான் நிஜம். காதலர்கள் தோற்றுப் போவாங்க. ஆனா காதல் தோற்கவே தோற்காது. அது தான் இந்த அழகி… தோற்கல. அது தான் முக்கியமான காரணம். இந்தப் படத்தில் பெரிய கதாநாயகன் இந்தப் படத்தோட தயாரிப்பாளர் உதயகுமார். ஒவ்வொரு கலைஞனும் முதல் படம் பண்றதுங்கறது மிகப்பெரிய விஷயம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

2002ல் தங்கர்பச்சான் இயக்கத்தில் வெளியான படம் அழகி. இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் எல்லாமே குளு குளு ரகம். பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயாணி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் காதலர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். காதலை அவ்வளவு அழகாக இதை விட வேறு எந்தப் படத்திலும் சொல்லவில்லை.

படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களுமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது தான் இந்தப்படத்தோட வெற்றிக்கு முக்கியமான காரணம். கதையும், திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கும் விதமும் படத்தை ரசிகர்களின் இதயத்திற்குள் நுழைத்துவிட்டது. படத்தில் ஒளியிலே தெரிவது தேவதையா, பாட்டு சொல்லி, உன் குத்தமா, ஒரு சுந்தரி, குருவி கொடைஞ்ச, டமக்கு டமக்கு ஆகிய பாடல்கள் உள்ளன.  அப்போது இந்தப் படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.

Published by
sankaran v

Recent Posts