பாகுபலி பிரபலத்துடன் கைக்கோர்த்த ரஜினி… சிறப்பான தரமான சம்பவம்!!

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கி வரும் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு ஆகியோர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
‘ஜெயிலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் வருகிற 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Jailer
“ஜெயிலர்” திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த், “டான்” பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்தன. மேலும் இத்திரைப்படத்தின் கதை விவாதங்கள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
ஒருபுறம் தேசிங்கு பெரியசாமி ரஜினியை வைத்து இயக்குவதாகவும், இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வந்தது. அதே போல் இயக்குனர் மணிரத்னம், ரஜினிக்கு ஒரு கதை சொல்லியுள்ளதாகவும் ரஜினிக்கும் அக்கதை பிடித்திருந்ததாகவும் கூறப்பட்டது. இவ்வாறு ரஜினியின் லைன் அப் குறித்து பல சூடான தகவல்கள் அவ்வப்போது வெளிவந்துகொண்டிருக்கின்றன.

Rajinikanth and Cibi
எனினும் “ஜெயிலர்” திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த்தின் 170 ஆவது திரைப்படத்தை சிபி சக்ரவர்த்திதான் இயக்குகிறார் என ஓரளவு உறுதிபடுத்தும் அளவுக்கு செய்திகள் வருகின்றன. இந்த நிலையில் “தலைவர் 170” திரைப்படம் குறித்து ஒரு சுவாரஸிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

Vijayendra Prasad
அதாவது “தலைவர் 170” திரைப்படத்தின் கதை விவாதத்தில் “பாகுபலி” திரைப்படத்தின் இயக்குனர் ராஜமௌலியின் தந்தையும் திரைக்கதை ஆசிரியருமான விஜயேந்திர பிரசாத் இணைந்துள்ளாராம்.
விஜயேந்திர பிரசாத், “பாகுபலி”, “மெர்சல்”, “தலைவி”, “ஆர் ஆர் ஆர்” போன்ற பல திரைப்படங்களில் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றியுள்ளார். அதே போல் தெலுங்கில் பல திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இந்த நிலையில் இவர் “தலைவர் 170” திரைப்படத்தின் திரைக்கதையில் இணைந்து பணியாற்ற உள்ளதாக ஒரு சூடான தகவல் வெளியாகியுள்ளது.