விஜயை ‘தல’னுதான் கூப்பிடுவேன்.. அப்படி சொன்னதும் தளபதி ரியாக்ஷன் என்ன தெரியுமா?

vijay
Vijay: இன்று தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆஃபிஸ் கிங்காக இருப்பவர் நடிகர் விஜய். 200 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்க கூடிய ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இத்தனை பெருமை இருந்தும் எல்லாவற்றையும் விற்றுவிட்டு அரசியலுக்குள் குதித்திருக்கிறார் விஜய். அப்படியெனில் அரசியலில் ஏதோ ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்ற தீரா ஆசையில்தான் வந்திருக்கிறார்.
அதற்கு முழு காரணமாக இருந்தது அரசியலில் இருக்கும் சில புள்ளிகள் இவருக்கு கொடுத்த சில பிரச்சினைகள்தான் காரணம். படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்தது, திடீரென ஐடி ரெய்டு நடத்தியது என தொடர்ந்து விஜய்க்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டேதான் இருந்தார்கள். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் நாமும் அரசியலில் இறங்கி ஒரு புது அரசியல் மாற்றத்தை நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று இறங்கியிருக்கிறார்.
தற்போது விஜய் எச்.வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கோவையில் பூத் கமிட்டி மா நாட்டை நடத்தி மிகப்பெரிய வெற்றியையும் கண்டிருக்கிறார் விஜய். அடுத்ததாக மதுரையிலும் ஒரு மா நாட்டை நடத்த போவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பிரபல நடன இயக்குனர் பாபா பாஸ்கர் விஜயை பற்றி சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
பாபா பாஸ்கரின் மகன் தீவிர விஜய் ரசிகராம். அதனால் விஜயுடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டாராம். படப்பிடிப்பின் போது இதை விஜயிடம் கூறியிருக்கிறார். இன்னொரு முக்கியமான விஷயம் விஜயை பாபா பாஸ்கர் தலனு தான் கூப்பிடுவாராம். மகன் ஆசைப்பட்டான் என்ற காரணத்தினால் விஜயும் புகைப்படம் எடுத்துக் கொண்டாராம்.

அதோடு நிறுத்தாமல் நீங்கள் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என பாபா பாஸ்கரின் மகன் கூற உடனே விஜய் ‘ம்ம்ம் பார்க்கலாம்..’ என சொல்லியிருக்கிறார். ஒரு வேளை விஜய் மீண்டும் படத்தில் நடிப்பாரா என்ற கேள்வியும் இதிலிருந்து நமக்கு தோன்றுகிறது. இதை பற்றி பாபா பாஸ்கர் கூறும் போது சினிமாவிற்கு ஒருத்தரை பிடித்துப் போய்விட்டால் அவரை சினிமா எக்காரணம் கொண்டும் விடாது. அப்படித்தான் விஜயும். அவ்வளவு சீக்கிரம் சினிமா விஜயை விட்டுவிடாது என்று கூறினார்.