ரஜினியின் கெரியரில் பெரிய பிரளயத்தை ஏற்படுத்திய படமாக ‘பாபா’ படம் அமைந்தது. 2002 ஆம் ஆண்டு மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான பாபா படம் பெருந்தோல்வியை தழுவியது. அந்த நேரத்தில் தான் ரஜினி இமயமலை சென்று வந்த நேரம். வந்ததும் முழு மூச்சுடன் தயாரானது தான் பாபா படம்.
இந்த படத்தை ரஜினியே கதை எழுதி தயாரித்தும் இருந்தார். தன்னுடைய மானசீக இயக்குனர்களில் ஒருவரான சுரேஷ் கிருஷ்ணாவை பாபா படத்தை இயக்க சொன்னார். படத்திற்கு ஏஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். பெரும் முதலீட்டில் உருவான பாபா படம் படுதோல்வியை தழுவி வினியோகஸ்தரர்களுக்கு பெரும் நஷ்டத்தை தந்தது.
அதன் பின் ரஜினி தன் சொந்த பணத்தை போட்டு அந்த நஷ்டத்தை ஈடு செய்தார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு புதுப் பொலிவுடன் மீண்டும் பாபா டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு ஏற்றவாறு கலர் கிரேடிங் செய்து வெளியாக உள்ளது. ஒவ்வொரு பிரேமும் புதுப்பிக்கப்பட்டு உருவாகி வருகிறது.
இதையும் படிங்க :அந்த டயலாக் பேச பயந்தேன்… ஆனா…? ரஜினிகாந்த செய்த செயலால் அழுத வடிவுக்கரசி..
சமீபத்தில் தான் ரஜினி பாபா படத்திற்கான டப்பிங் வேலைகளை முடித்தார். மேலும் படத்திற்கான அனைத்து பாடல்களும் ரீமிக்ஸ் செய்து டால்பி மிக்ஸ் ஒலி வடிவில் தயாராகிக் கொண்டிருக்கின்றது. 2002 ல் வெளியான பாபா படம் ஆன்மீகமும் மந்திர மாயஜாலமும் கலந்த கலவையாக அமைந்திருந்தது.
படம் பார்த்தவர்களை மிகுதிக்கு அதிகமாக இருக்கிறது என்று எண்ண வைத்தது. இதனாலேயே பாபா படம் எதிர்பார்த்த அளவில் வரவேற்பை பெறவில்லை. தமிழ் சினிமாவில் காலம் கடந்த ஒரு வெற்றிப்படத்தை தான் டிஜிட்டல் முறையில் ரீ ரிலீஸ் செய்வார்கள்.
உதாரணமாக எம்ஜிஆரின் சூப்பர் ஹிட் படங்கள் இன்னமும் திரையில் இப்ப உள்ள தொழில் நுட்பத்திற்கேற்ப வெளியிடப்படுகின்றன. நல்ல வரவேற்பை பெற்ற சிரித்து வாழ வேண்டும் படத்தின் டிரெய்லர் கூட நேற்று வெளியிட்டார்கள். இப்படி இருக்க படுதோல்வி அடைந்த பாபா படத்தை மறுவெளியீடு செய்ய ரஜினி எப்படி சம்மதித்தார் என்ற கேள்வி பலபேர் மத்தியில் நிலவுகின்றது.
இதையும் படிங்க : நடிகர் திலகம் வீட்டை நோக்கி படையெடுக்கும் போலீஸ்?.. மோசடி வழக்கில் சிக்கி தவிக்கும் வாரிசுகள்!..
அந்த சம்பவத்திற்கு பின்னாடி ஒரு காரணமே இருக்கின்றதாம். கன்னட மொழியில் இருந்து பேன் இந்திய படமாக சமீபத்தில் வெளியாகி ஒட்டு மொத்த திரையுலகத்தையும் பிரமிப்பில் ஆழ்த்திய படம் ‘காந்தாரா’. இந்த படத்தை ரிஷப் ஷெட்டியே இயக்கி ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.
படம் வெளியாகி வெற்றி நடை போட்டதும் ரஜினியை சந்தித்து ஆசிர்வாதமும் வாங்கினார் ரிஷப் ஷெட்டி. மேலும் இத்திரைப்படம், கர்நாடகா மாநிலத்தின் துளு நாட்டில் கொண்டாடப்படும் பூத கோலா எனும் தெய்வ வாக்கு கூறுபவர் தொடர்பான கதைக் கருவை கொண்டது. இதுவும் ஒரு விதத்தில் ஆன்மீகம் கலந்த ஒரு மாயாஜால கதையில் அடங்குவதால் மக்களுக்கு பிடித்து வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.
ஒரு வேளை இப்ப உள்ள தலைமுறைகளுக்கு ஏற்ப சின்ன சின்ன மாற்றங்கள் செய்து பாபா படத்தை வெளியிட்டால் விட்டதை பிடித்து விடலாம் என்று ரஜினி யோசித்து இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று கோடம்பாக்கத்தில் கூறிவருகின்றனர்.
நடிகர் அஜித்…
MGR :…
நடிகர் அஜித்…
தமிழ்சினிமாவில் பிரபல…
நடிகர் தனுஷ்…