எம்.ஜி.ஆரால் எனக்கு இது நடந்ததே இல்லை.. மனம் திறந்த நடிகை பபிதா

babitha
தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு அட்ஜெஸ்மெண்ட் பிரச்சனை அன்று துவங்கி இன்று வரை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் சில நடிகைகளுக்கு பாதுகாப்பாக எம்.ஜி.ஆர் இருந்தார் என்றால் நம்ப முடிகிறதா? புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் வலதுகரமாக இருந்தவர் ஜஸ்டின். இவரின் ஒரே மகள் தான் பபிதா. தமிழ் சினிமாவில் சின்ன வீடு படத்தின் மூலம் அறிமுகமானவர்.

babitha
அதுமட்டும் இல்லாமல் கமலஹாசனின் ப்ளாக்பஸ்டர் ஹிட் படமான நாயகன் படத்தில் நான் சிரித்தால் தீபாவளி என்ற பாடல் மிக பிரபலம். இதில் ஆடியதும் பபிதா தான். இதனை தொடர்ந்து நிறைய ஒற்றை பாடலுக்கு ஆடியவருக்கு கவர்ச்சி வேடங்களே அதிகம் கிடைத்தது. தொடர்ச்சியாக ஒரு ரவுண்ட் வந்தாலும் இவரால் சினிமாவில் பெரிய இடத்தினை பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், ஒரு பேட்டியில் இவரிடம் அட்ஜெஸ்மெண்ட் போன்ற பிரச்சனை எதுவும் ஏற்பட்டு இருக்கிறதா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பபிதா, நான் எம்.ஜி.ஆரை பெரியப்பா என்றே அழைப்பேன். அதனால் சினிமா உலகம் என்னை அவர்கள் வீட்டு பெண்ணாகவே பார்த்தார்கள். ஒருவர் கூட என்னிடம் அத்துமீறி நடக்கவில்லை எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.