பப்ளிமாஸ் நடிகையை கடுப்பேற்றிய இயக்குனர்....
கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை தொடர்ந்து அனைத்து நடிகைகளும் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே நடிப்பேன் என அடம்பிடித்து வருகிறார்கள். ஒரு சில இளம் நடிகைகளை தவிர அனைத்து முன்னணி நடிகைகளும் தங்களுக்கும் ஹீரோவுக்கு இணையான கேரக்டர் வேண்டும் என கேட்க தொடங்கி விட்டார்கள்.
த்ரிஷா, சமந்தா, காஜல், தமன்னா போன்ற அனைத்து நடிகைகளும் சமீபகாலமாக இதுபோன்ற கதைகளை தான் தேர்வு செய்து வருகிறார்கள். இவர்களை போல தான் அந்த ப்பளிமாஸ் நடிகையும் சமீபத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதை ஒன்றை தேர்வு செய்து நடித்தார்.
ஆனால் படத்தின் இயக்குனரோ கதையில் கெஸ்ட் ரோல் ஒன்று உள்ளது அதற்கு இந்த முன்னணி நடிகரை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார். அந்த ஹீரோ வேறு யாருமல்ல நடிகையின் முன்னாள் காதலர் தான். முதலில் தயங்கிய நடிகை பின்னர் கெஸ்ட் ரோல் தானே என சம்மதம் தெரிவித்துள்ளார்.
அதற்கு பின்னர் தான் கதையில் டிவிஸ்ட்டே நடந்துள்ளது. நடிகரின் ஈடுபாட்டை கண்ட இயக்குனர் ககையில் அவருக்கான கதாபாத்திரத்தை சற்று அதிகரித்துள்ளார். அதன் பின்னர் நடிகையின் படம் என்பது மறைந்து நடிகரின் படம் என பெயர் வந்து விட்டதாம். நடிகையை விட நடிகருக்கே அந்த படத்தில் அதிக பெயரும் கிடைத்து வருகிறதாம்.
அதுமட்டுமின்றி படக்குழுவினரும் நடிகரை வைத்தே படத்திற்கான புரமோஷன் பணிகளை செய்கிறார்களாம். தன்னுடைய படத்தில் நடிகருக்கு முக்கியத்துவம் கொடுத்து படக்குழுவினர் புரமோஷன் செய்வதால் அவர்கள் மீது கடுப்பில் இருக்கிறாராம் நடிகை. எனக்கு முக்கியத்துவம் அளிக்கும் படம் என கூறி தற்போது அவருக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள் என இயக்குனர் மீது நடிகை செம கடுப்பில் உள்ளாராம்.