சர்ச்சைக்கு மத்தியில் வெளியான ‘பேட் கேர்ள்’ படத்தின் லிரிக்கல் வீடியோ.. பாடல் எப்படி இருக்கு?

by Rohini |   ( Updated:2025-03-28 08:21:56  )
bad
X

bad

வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோர் தயாரிப்பில் உருவான திரைப்படம் பேட் கேர்ள். இந்த படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குனர் வர்ஷா பரத் இயக்கியிருக்கிறார். படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி சர்ச்சையில் சிக்கியது. அதாவது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தும் விதமாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் இயக்குனர் அதற்கு தக்க பதிலடி கொடுத்திருந்தார். அதாவது இந்த சமூகம் பெண்களை அவர்களுக்கு பிடித்தது போல வாழ விடவில்லை. பெண்களுக்கு உண்டான சுதந்திரம் எது என்பதை மையப்படுத்தியே இந்த படத்தை எடுத்திருப்பதாக அவர் கூறினார்.

இதற்கிடையில் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகி இருக்கிறது. ப்ளீஸ் என்ன அப்படி பார்க்காதே என ஆரம்பிக்கும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் இசை அமைப்பாளர் அமித் திருவேதி. மாளவிகா மனோஜ் இந்த பாடலை பாடியிருக்கிறார்.

கபீர் வாசுகி இந்த பாடலுக்கான வரிகளை எழுதி இருக்கிறார். படத்தில் அஞ்சலி சிவராமன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன் என பல புது முகங்கள் நடித்திருக்கின்றனர் .ப்ரீத்தா ஜெயராமன் படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார்.

ராதா ஸ்ரீதர் எடிட்டராக வேலை பார்த்திருக்கிறார். கூடிய சீக்கிரம் இந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது .வெற்றிமாறன் தயாரிப்பு எனும் போது படத்தில் ஏதாவது ஒரு விஷயம் கண்டிப்பாக ரசிகர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story