இயற்கையின் சங்கமத்துடன் இணைந்த காதலின் சங்கமம்...இவ்வளவு அற்புதமான படத்தை இன்னுமா பார்க்கல..!

by sankaran v |
இயற்கையின் சங்கமத்துடன் இணைந்த காதலின் சங்கமம்...இவ்வளவு அற்புதமான படத்தை இன்னுமா பார்க்கல..!
X

BRG

ஊருக்கு வெளியே ரெயில்வே கேட் இருக்கும். கேட் மூடப்பட்டால் ரயில் வரப் போகிறது என்று அர்த்தம். அப்போது பஸ், லாரி, வேன், ஆட்டோ, பைக் என சாலையின் இருபுறங்களில் வரிசை கட்டி வாகனங்கள் நிற்கும்.

அப்போது பூ, பழம், நொறுக்குத் தீனிகள் விற்போர் வாகனங்களில் உள்ள பயணிகளிடம் விற்று வருவர். இதை நாம் அன்றாட வாழ்க்கையில் பார்த்திருப்போம். இவர்களை வைத்து தமிழ்சினிமாவில் ஒரு படமே எடுத்து விட்டார்கள்.

அதுதான் பகவதிபுரம் ரயில்வே கேட். கையில் பேசும் கிளியுடன் அங்கு வந்து சிறு வணிகம் செய்யும் ஒரு பெண் வியாபாரி தான் படத்தின் நாயகி ராஜலெட்சுமி.

bhagavathipuram RG

செம சூப்பராக நடித்து இருப்பார். ஆர்.செல்வராஜ் இயக்கத்தில் 1993ல் வெளியானது. இளையராஜாவின் இன்னிசையில் படத்தின் பாடல்கள் செம மாஸாக இருந்தது. அந்தக் கிராமத்துக்கு முதன் முறையாக பேருந்து வருகிறது. அதன் கண்டக்டர் தான் கார்த்திக். படத்தின் திரைக்கதை செமயாக இருக்கும்.

அந்தக்காலத்தில் ரேடியோவில் அடிக்கடி நேயர்களால் விரும்பிக் கேட்கும் பாடல் என்று இந்தப் படத்தின் பாடல்கள் ஒலிபரப்பாகும். அவற்றில் ஒன்று தான் தீபன் சக்கரவர்த்தி, எஸ்.பி.சைலஜா பாடிய காலை நேர காற்றே பாடல்.

துள்ளும் இளமையுடன் கிட்டார் ஒலிக்கிறது. வீணை, தபேலா போட்டி போட்டுக்கொண்டு இசையைத் தருகிறது. பாதையின் இருபுறமும் காற்றில் சலசலக்கும் செடிகொடிகள், நாற்றுகள் என இயற்கை அழகை ரசிக்க வைக்கிறது இந்தப் பாடல்.

B R G

கார்த்திக்கும், ராஜலெட்சுமியும் இணைந்து நடித்த இந்தப் பாடல் நம்மை ரசிக்க வைக்கிறது. அடுத்ததாக உமா ரமணனுடன் இணைந்து இளையராஜா பாடி அசத்திய பாடல். செவ்வரளித் தோட்டத்திலே உன்னை நினைச்சு பாடல்.

கிராமியக் காட்சிகளை மனதில் சுமக்க வைக்கும் பாடல். காதலில் மூழ்கித் திளைக்கும் ரகசிய காதல் ஜோடியின் கொண்டாட்டம். செம சூப்பர் சாங்க் இது. தானானே...தானானே என ஒலிக்கும் கோரஸ் நமக்குள் ஒரு அழகிய கிராமிய உணர்வைத் தந்து செல்கிறது. பசுமையான நினைவுள் அவ்வப்போது வந்து செல்கிறது.

Sevvarali Thottathile

அருவிகளில் இருந்து பிரிந்து வரும் ஓடைகள், பாறைகள், தனிமைச்சிறையில் அகப்பட்ட காதலர்களின் பரவசத்தால் நெகிழும் குதிரை என நாம் பாடலை அனுபவித்துப் பார்க்க ஏராளமான விஷயங்கள் புதைந்து கிடக்கின்றன. அதிலும் இளையராஜா பாடும் கொட்டுகிற அருவியிலே குளிக்கிற குருவிகளே என்ற வரிகள் நம் ரசனையைப் பதம் பார்த்துவிடும்.

கங்கை அமரன் பாடிய டைட்டில் பாடல் மட்டும் தான் படத்தில் இல்லை.தென்றல் காற்றும் அன்புப் பாட்டும் பாடலை சசிரேகா பாடியிருப்பார். காதல் வாழ்வின் சோகச்சுவடுகளை நினைத்து நாயகி வருந்துவதாகப் பாடியிருப்பார். சசிரேகாவின் சிறந்த சோலோ பாடல்களில் இதுவும் ஒன்று. அதேபோல எஸ்.பி.பி. பாடும் ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை பாடல் காதலனின் சோகப்பாடல்.

Next Story