ரஜினி படத்தின் க்ளைமாக்ஸ் தப்பு...! தலைவரை அதிர்ச்சியில் உறையவைத்த பாக்யராஜ்...
1991 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்மூட்டி நடிப்பில் உருவான படம் ‘தளபதி’. இந்த படத்தில் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் ஷோபனா, ஸ்ரீவித்யா, பானுப்ரியா உட்பட பல நடிகர்களும் நடித்திருந்தனர்.
படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றி வாகை சூடியது. ஆனால் இந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை பற்றி பிரபல நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் ஒரு பேட்டியில் அண்மையில் விமர்சனம் செய்தார். அதாவது கடைசி காட்சியில் ரஜினி எப்பொழுதும் மம்மூட்டியின் கோட்டை தாண்ட மாட்டார் என தெரிந்து அரவிந்த் சாமியை கொன்று விடு என ரஜினியிடம் மம்மூட்டி கூற ரஜினி என்னால் முடியாது, அது என் தம்பி என சட்டென தன் கதாபாத்திரத்தில் இருந்து விலகுவது மாறி அந்த காட்சியில் தோன்றுவதாக பாக்யராஜ் கூறினார்.
மேலும் அந்த காட்சிக்கு பதிலாக மம்மூட்டி கூறுவதை மீறமுடியாமல் தம்பி என்பதை மறைத்து அரவிந்த் சாமியை கொன்றுவிடுவதற்கு புறப்பட அந்த பக்கத்தில் இருந்து இன்னொருவர் இந்த உண்மையை மம்மூட்டியிடம் கூற ரஜினி தன் மீது எவ்ளோ மரியாதை வைத்துள்ளார் என்பதை உணர்ந்து அவன் என்னிடம் சொல்லியிருந்தால் என் நண்பனுக்காக அவன் குடும்பத்தை அவனுடன் சேர்த்து வைத்திருப்பேன்.
இதை என்னிடம் இருந்து மறைத்து விட்டானே என்று ஆவேசமாக மம்மூட்டி போவது போல காட்சி அமைத்திருந்தால் படத்தின் வெற்றி இன்னும் எங்கேயோ போயிருக்கும் என கூறினார். இதை ஒரு விழாவில் ரஜினியிடமே நேரடியாக அந்த க்ளைமாக்ஸில் கொஞ்சம் மாற்றம் செய்திருந்தால் என பேச்சை ஆரம்பிக்கும் போதே ரஜினி படபடவென பாக்யராஜ் பக்கம் வந்து அமர இந்த க்ளைமாக்ஸை ரஜினியிடம் கூற மெய்சிலிர்த்து விட்டாராம் ரஜினி. பாக்யராஜை மிகவும் பிரமிப்பாக பார்த்தாராம்.