ஃபர்ஸ்ட் நைட் நடக்கப் போய்தான் அந்த படம் ரீச் ஆச்சு! பாக்யராஜ் சொன்ன இண்ட்ரஸ்டிங்கான மேட்டர்

Published on: July 19, 2024
bagya
---Advertisement---

தமிழ் சினிமாவில் திரைக்கதை மன்னன் என அறியப்படுபவர் நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ். தமிழ் மட்டுமில்லாமம் ஹிந்தியிலும் இவரின் பணி ஆகச் சிறந்தது. இவருக்கு என ஒரு தனி மரியாதையே இன்றளவு இந்திய சினிமாவில் இருந்து வருகிறது. இந்திய சினிமாவிலேயே திரைக்கதையில் பெரும் சாதனை படைத்தவராக பாக்யராஜ் அறியப்படுகிறார்.

நடிகராகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவராக விளங்கினார் பாக்யராஜ். முருங்கைக் காய் என்றாலே பாக்யராஜ்தான் என்று புகழ் பெறும் அளவுக்கு இவருடைய முந்தானை முடிச்சு திரைப்படம் அமைந்தது. அந்தப் படத்தை இயக்கியதோடு அதில் லீடு ரோலிலும் நடித்தார் பாக்யராஜ். ஏவிஎம் ப்ரடக்‌ஷனில் தயாரான இந்தப் படத்தில் பாக்யராஜுக்கு ஜோடியாக ஊர்வசி நடித்திருப்பார்.

அந்தப் படத்தில் ஒரு குறும்புக் கார பெண்ணாக ஊர்வசி நடிக்க மிகப்பெரும் புகழ் பெற்றார். மனைவியை இழந்த பாக்யராஜ் ஒரு கிராமத்தில் ஆசிரியராக வேலைக்கு வருவார். அந்த கிராமத்தில்தான் சின்ன பசங்களோடு லூட்டி அடித்துக் கொண்டிருக்கும் ஒரு குறும்புக்கார பெண் கதாபாத்திரத்தில் ஊர்வசி நடித்திருந்தார். கிராமத்தில் அந்த பள்ளிக்காக ஒரு வீட்டை தயாரிப்பு நிறுவனம் கட்டினார்கள்.

படம் முடிந்த பிறகு அந்த வீட்டை அந்த கிராமத்திற்கே நன்கொடையாக கொடுத்துவிட்டார்களாம். முந்தானை முடிச்சு படத்தை பொறுத்தவரைக்கும் முருங்கைக் காய் அப்படி இப்படி என இன்றளவு பிரபலப்படுத்தி வந்தார்கள் ரசிகர்கள். ஆனால் உண்மையிலேயே அந்த படம் இந்தளவு ஹைப்பை ஏற்படுத்தியதற்கு வேறொரு விஷயம்தான் காரணம் என பாக்யராஜ் கூறியிருக்கிறார்.

அதாவது ஊர்வசியை திருமணம் செய்ததில் இருந்து அவரை தன் பக்கத்திலேயே படுக்க அனுமதிக்க மாட்டார் பாக்யராஜ். இதை பார்த்த பெண்கள் ‘இப்ப என்ன தப்பு செஞ்சுப்புட்டா? ஏதோ குழந்தையை தாண்டிட்டா. அதுக்காக இந்த பாக்யராஜ் பக்கத்துலயே படுக்கவிட மாட்ராரே?’ என பொலம்பி வந்தார்களாம். எப்படா ஃபர்ஸ்ட் நைட் நடக்கும் என படம் முடியும் வரை கதையை நகர்த்தியிருக்கிறார் பாக்யராஜ்.

கடைசியில் ஃபர்ஸ்ட் நைட் சீனில் ஊர்வசி மேல் படுக்கும் மாதிரி பாக்யராஜ் காட்டி முடித்திருப்பார். அதன் பிறகே பெண்கள் நிம்மதியடைந்தார்கள் என படத்தின் ரீச்சை பற்றி ஒரு பேட்டியில் பாக்யராஜ் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.