த.வெ.க கட்சி கொடியில் யானை சின்னத்திற்கு எதிர்ப்பு!.. ஆரம்பமே அமர்க்களம்தான்!...
Vijay: தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய். 32 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். டீன் ஏஜில் சினிமாவில்தான் நடிப்பேன் என அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரிடம் அடம்பிடித்து நடிக்க வந்தவர். நாளைய தீர்ப்பு என்கிற படம் மூலம் அறிமுகமானவர் ஒரு கட்டத்தில் வசூல் சக்கரவர்த்தியாக மாறினார்.
விஜயின் சம்பளம் அதிகரித்துக்கொண்டே போய் இப்போது 200 கோடியில் வந்து நிற்கிறது. ஆனால், சினிமா வேண்டாம்.. அரசியலுக்கு போகிறேன் என சொல்லி மக்கள் சேவை செய்ய கிளம்பியிருக்கிறார் விஜய். கடந்த சில வருடங்களாகவே அரசியலுக்கு வருவது தொடர்பாக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் தொடர்ந்து பேசி வந்தார்.
இதையும் படிங்க: நிகழ்ச்சி முடிந்ததும் விஜய்க்கு காத்திருந்த அதிர்ச்சி.. ஜோசியர் இப்படி சொல்லிட்டாரே!…
மேலும், விஜய் ரசிகர் மன்றம் விஜய் மக்கள் மன்றம் என பெயர் மாற்றப்பட்டது. விஜயின் மன்ற நிர்வாகிகள் பல ஊர்களிலும் அன்னதானம் செய்வது, ஊழைகளுக்கு உதவுவது, ஊனமுற்றவர்களுக்கு உதவுவது என பல நல்ல காரியங்களை செய்து வந்தனர். இந்த நிலையில்தான் சில மாதங்களுக்கு முன்பு தான் அரசியலுக்கு வரப்போவதாக விஜய் அறிவித்தார்.
தனது கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் என அறிவித்த விஜய் 2026 சட்டமன்ற தேர்த்லே தனது இலக்கு என்றும் சொல்லி இருக்கிறார். அதாவது 2026 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என அவர் அறிவித்திருக்கிறார். அரசியல்ரீதியாக மக்களிடம் தனக்கு எவ்வளவு வரவேற்பு இருக்கப்போகிறது என்பதை விஜய் பார்க்கபோகிறார்.
இந்நிலையில்தான், தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை இன்று காலை சென்னையில் உள்ள தனது கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் அறிமுகம் செய்தார். அந்த கொடி இரண்டு யானைகளுக்கு நடுவே வாகை மலர் இருப்பது போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இந்த கொடிக்கு தமிழக பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அந்த கட்சியின் கொடியில் ஏற்கனவே யானை இருக்கிறது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆனந்தன் ‘தமிழக வெற்றிக் கழக கட்சி கொடியில் இடம் பெற்றுள்ள யானைகளை அகற்ற வேண்டும். தேர்தல் ஆணைய விதிப்படி சிக்கிம், அசாம் தவிர எந்த மாநில கட்சிகளும் யானையை கொடியிலோ, சின்னமாகவோ பயன்படுத்த முடியாது. எங்கள் தலைமையிடம் இதுபற்றி பேசி வருகிறோம்’ என அவர் சொல்லி இருக்கிறார்.
என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்!..
இதையும் படிங்க: கோட் ஆடியோ லான்ச் இருக்கா?!.. விஜய் எடுத்த முடிவு சரியா?!.. அவ்ளோ பயமா?!…