மனோபாலா மரணத்திற்கு இதுதான் காரணம்!.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன அதிர்ச்சி தகவல்!…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலங்கள் தொடர்ந்து மரணமடைந்து வருகிறார்கள். விவேக்கை தொடர்ந்து மயில்சாமி.. இப்போது மயில்சாமியை தொடர்ந்து மனோபாலாவின் மரணம் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உதவி இயக்குனர், இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என சினிமாவில் படிப்படியாக முன்னேறியவர் மனோபாலா. 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு கடந்த சில வருடங்களாக மனோபாலா சிகிச்சை பெற்று வந்தார். 15 நாட்களுக்கு முன்புதான் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். சென்னை வடபழனியில் உள்ள அவரின் வீட்டிலேயே இன்று மரணமடைந்தார். அவரின் மரணத்திற்கு திரையுலகினர் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மனோபாலா மரணம் பற்றி பேசியுள்ள மனோபாலா ‘மோகன், விஜயகாந்த், ரஜினி என அனைவரை வைத்தும் படம் இயக்கியவர் மனோபாலா. அவர் இயக்குனராக அறிமுகமான அனைத்து படங்களிலும் நான் நடித்துள்ளேன். அன்பாக பேசுவார். எப்போதும் சிரித்த முகத்துடன் வலம் வருவார்.
படம் இயக்குவதை நிறுத்திய பின் சினிமாவில் நடிக்க பல இயக்குனர்களிடம் இவரே தொடர்பு கொண்டு வாய்ப்பு கேட்டார். எனக்கு தெரிந்து கடந்த 30 வருடங்களாக அவருக்கு மதுப்பழக்கம் இருந்தது. அதுதான் அவரின் மரணத்திற்கு காரணம். கல்லீரல் கெட்டு அவர் மரணமடைந்துள்ளார். மதுவை பற்றி எவ்வளவு விழிப்புணர்வு செய்தாலும், குடி குடியை கெடுக்கும் என எல்லோரும் சொன்னாலும் மக்கள் கேட்பதே இல்லை’ என பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.