இந்த மொக்க படத்துக்கு இவ்வளவு பில்டப்பா?!.. கொட்டுக்காளி படத்தின் முதல் விமர்சனம்!….

Published on: August 20, 2024
kottukaali
---Advertisement---

kottukkaali: சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் சூரி நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அதற்கு காரணம் இந்த படம் வெளிநாடுகளில் சில விருதுகளை வாங்கி இருக்கிறது. ஆனால் இது கமர்ஷியல் படமல்ல. கருடன் படம் போல இருக்கும் என நினைத்துவிட்டு படம் பார்க்க வராதீர்கள் என சூரி சொல்லி இருந்தார்.

அதற்கான அர்த்தம் இப்போதுதான் புரிகிறது. இந்த படம் வருகிற 23ம் தேதி வெளியாகவுள்ளது. கடந்த 18ம் தேதி செய்தியாளர்களுக்கென ஒரு காட்சி திரையிடப்பட்டது. இந்நிலையில், இப்படத்தை பார்த்த பயில்வான் ரங்கநாதன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அவர் பேசியிருப்பதாவது.

kottukkaali

சூரி வெளிநாட்டில் வேலை செய்து தனது மாமன் மகளை படிக்க வைக்கிறார். அந்த பெண்ணோ வேறு ஒருவனை காதலிப்பதாகவும், அவனைத்தான் திருமணம் செய்வேன் என சொந்த ஊருக்கு வரும் சூரியிடம் சொல்கிறார். இதைக்கேட்டு சூரி அதிர்ச்சி அடைகிறார். பக்கத்து கிராமத்தில் ஒரு சாமியார் இருக்கிறார். அவர் பெண்ணின் மனதை மாற்றிவிடுவார் என உறவினர்கள் சொல்ல எல்லோரும் சேர்ந்து ஷேர் ஆட்டோவில் அங்கே போகிறார்கள்.

போகிறார்கள் போகிறார்கள்.. போய்க்கொண்டே இருக்கிறார்கள். சூரி உச்சா போகிறார். வேறொருவர் உச்சா போகிறார். ஒரு இளம்பெண் நாப்கின் போடுகிறார். செல்லும் வழியில் ஒரு பூப்புனித நீராட்டு விழா நடக்கிறது. அங்கு பாடும் ஒரு பாடலை ஆட்டோவில் வரும் ஒரு சிறுவன் என பாட கோபமடைந்த சூரி எல்லோரையும் போட்டு அடிக்கிறார்.

 

அதன்பின் அந்த சாமியாரிடம் போகிறார்கள். சாமியாரை நம்பாத சூரி அங்கிருந்து நடந்து போகிறார். அவரின் பின்னால் எல்லோரும் போகிறார்கள். அதோடு படம் முடிகிறது. படத்தில் கதை என ஒன்றுமில்லை. படத்தின் இயக்குனர் வினோத் ராஜுக்கு ஒன்றுமே தெரியவில்லை. அவரிடம் சரக்கு இல்லை. சூரி எப்படி நடித்தார் என்றும் தெரியவில்லை. சிவகார்த்திகேயன் இதை எப்படி தயாரித்தார் என்பதும் தெரியவில்லை.

படம் படு மொக்கையாக இருக்கிறது. விருது வாங்கினால் மட்டும் போதுமா?.. ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடிக்க வேண்டமா?.. கண்டிப்பாக இந்த படம் ஓடாது. முதல் காட்சியை பார்க்க மட்டுமே ரசிகர்கள் வருவார்கள். அதன்பின் யாரும் போக மாட்டார்கள். இதுதான் நடக்கும்’ என கொட்டுக்காளி படத்தை பொளந்து கட்டியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

இதையும் படிங்க: விஜய் என்னிடம் நாலுமுறை அப்படி பண்ணார்… சங்கீதா கிரிஷை சங்கடப்படுத்திய சம்பவம்…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.