பொண்டாட்டி புள்ள வரல!.. ஆயிரத்தெட்டு பஞ்சாயத்து!.. விஜய்க்கு அரசியல் தேவையா?!.. விளாசும் பிரபலம்..

by சிவா |
vijay
X

#image_title

Tvk vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக கட்சி கொடியை அறிமுகம் செய்ததோடு, கட்சி தொடர்பான பாடலையும் வெளியிட்டிருக்கிறார் நடிகர் விஜய். தீவிர அரசியலின் முதல் அடியை எடுத்து வைத்திருக்கும் விஜய் மீது விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் விஜயின் அரசியல் நடவடிக்கை பற்றி சினிமா செய்தியாளர் பயில்வான் ரங்கநாதன் பேசியதை பார்ப்போம்.

கட்சி கொடியையும், பாடலையும் அறிமுகம் செய்துள்ள அந்த விழாவில் அப்பா - அம்மா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், அவர் அதை செய்யவில்லை. அவரின் அம்மா ஷோபா அவரிடம் பேச ஏதோ முயல்கிறார்.. ஆனால், விஜயோ கண்டுகொள்ளாமல் போகிறார். பெரியவர்கள் மாதா, பிதா, குரு, தெய்வம் என்றே சொல்லி இருக்கிறார்கள். ஆனால், பெற்றோருக்கு உரிய மரியாதையை விஜய் செய்யவில்லை.

vijay

vijay

அவரின் மனைவி, மகன், மகள் என யாருமே வரவில்லை. பொதுவாக ஒருவர் அரசியல் கட்சி துவங்கினால் அவரின் மனைவி, பிள்ளைகள் கண்டிப்பாக வருவார்கள். ஆனால், விஜய் குடும்பத்தில் யாரும் வரவில்லை. எனவே, அங்கு ஏதோ சிக்கல் இருப்பது தெரிகிறது. இத்தனைக்கும் அவரின் மகன் சஞ்சய் சென்னையில்தான் இருந்தார்.

இதுவரை செய்தியாளர் சந்திப்பையும் விஜய் சந்திக்கவில்லை. என்ன பயம் என் கேட்க தோன்றுகிறது.. அதேபோல், கொடியை அறிமுகம் செய்த அவர் அந்த கொடியில் இடம் பெற்றிருக்கும் சின்னம் மற்றும் பூவிற்கு என்ன அர்த்தம் என விரைவில் சொல்கிறேன் என்கிறார். அதை அப்போதே சொல்லுவதில் அவருக்கு என்ன குழப்பம் என தெரியவில்லை.

ஒருபக்கம் கொடியில் யானையை விஜய் பயன்படுத்த முடியாது என ஒரு அரசியல் கட்சி சொல்லி இருக்கிறது. விரைவில் அவர்கள் நீதிமன்றம் போவார்கள். அதை விஜய் சந்திக்க வேண்டி இருக்கும். விழாவில் மிகவும் சுருக்கமாக பேசிவிட்டு போய்விட்டார் விஜய். அவரின் கட்சி கொள்கை, கோட்பாடு என்னவென இதுவரை அவர் சொல்லவில்லை.

அனைவரிடமும் சுமூக உறவோடு செயல்படுவோம் என்கிறார். அப்படி என்றால் அவர் யாரை எதிர்க்கப்போகிறார்? என்கிற கேள்வி வருகிறது. இதற்கெல்லாம் விஜயிடம் பதில் இல்லை. தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கோட் படத்தை புரமோட் செய்யக்கூடாது என விஜய் சொல்கிறார். அப்படியெனில் விஜய் ரசிகர்கள் எப்படி படம் பார்ப்பார்கள்? விஜய் ரசிகர்கள் இல்லாமல் எப்படி தமிழக வெற்றிக் கழகம்?. ஒரு அரசியல் கட்சி தலைவருக்கு தைரியம் மிகவும் முக்கியம். அது விஜயிடம் இருப்பது போல தெரியவில்லை’ என பயில்வான் ரங்கநாதன் பேசியிருந்தர்.

இதையும் படிங்க: விஜய் 69 படத்துக்கு இப்படி ஒரு சதியா? தளபதியோட நெக்ஸ்ட் ஸ்டெப் என்ன?

Next Story