எந்த தமிழ் பொண்ணும் அப்படி சொல்லமாட்டாங்க! - குஷ்புவின் பேச்சுக்கு பதிலளித்த பயில்வான்...

1990 களில் இளைஞர்களின் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்த கதாநாயகிகள் குஷ்பு முக்கியமானவர். 1991 ஆம் ஆண்டு அவர் நடித்த சின்னத்தம்பி திரைப்படம் தமிழ் சினிமாவில் குஷ்புவிற்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
அதன் பிறகு தொடர்ந்து ரஜினி, கமல், சத்யராஜ் என அப்போது இருந்த அனைத்து பெரிய நடிகர்களோடும் கதாநாயகியாக நடித்தார். அதன் பிறகு சில காலங்களில் சினிமாவை விட்டு விலகினார் குஷ்பு. ஆனாலும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் குஷ்பு நடித்து வந்தார்.

தற்சமயம் அதிகமாக அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார். இடையில் ஒரு பேட்டியில் அவர் பேசும்போது பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து அவரிடம் பேசப்பட்டது.
குஷ்புவின் கருத்து:
அப்போது பேசிய குஷ்பு சிறு வயதில் தனக்கும் கூட பாலியல் வன்கொடுமைகள் நடந்ததாகவும், தனது தந்தையே தனக்கு அதை நிகழ்த்தியதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில் அவர் கூறும்போது “எந்த தமிழ் பெண்ணும் குஷ்பு கூறியது மாதிரி ஒரு விஷயத்தை சொல்ல மாட்டாங்க. குஷ்பு இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். அங்கு பல தார முறை இருப்பதால் அவருடைய அம்மா மறுமணம் செய்திருக்கலாம். அவரால் குஷ்பு பாதிக்கப்பட்டிருக்கலாம்.

மேலும் இப்போதெல்லாம் நடிகைகள் பப்ளிசிட்டிக்காகவே இந்த மாதிரி விஷயங்களை சொல்கின்றனர் என கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
இதையும் படிங்க: தன் மனைவிக்காக கண்ணியம் தவறாத அஜித்!.. சொன்ன சொல்லை இன்றளவும் காப்பாற்றி வரும் தல..