முதல்ல வீட்ட பாரு... அப்புறம் நாட்டை பார்ப்போம்!.. விஜயை விளாசிய பயில்வான் ரங்கநாதன்...

Vijay tvk: தான் அரசியலுக்கு வருவதாக விஜய் அறிவித்துள்ள விஷயம்தான் இப்போது ஊடகங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒத்துக்கொண்ட படங்களில் நடித்து முடித்து முழுநேர அரசியல்வாதி ஆகப்போவதாகவும், தன்னுடையை கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் எனவும் அறிவித்திருக்கிறார் விஜய்.

மேலும், பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடாது எனவும் 2026 சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு எனவும், சாதி, மத பேதம் இல்லாத, ஊழலை ஒழிக்கும் இயக்கமாக தனது கட்சி இருக்கும் என அவர் கூறியிருக்கிறார். அரசியலுக்கு வந்துவிட்டால் பல விமர்சனங்களை தாங்க வேண்டியிருக்கும். விஜய் எப்படி இதையெல்லாம் தாங்கி கொண்டு முன்னேறுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: நான் எப்படி நம்புறது? விஜய்க்கு ஓட்டுப் போட மாட்டேன்.. நடிகர்கள் அரசியலை பற்றி அப்பவே சொன்ன அரவிந்த்சாமி

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் விஜயின் அரசியல் வரவு குறித்து பேசிய பத்திரிக்கையாளர் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் ‘விஜய் நடிகராக இருக்கும்வரை அவரின் சொந்த பிரச்சனையை பேசமாட்டார்கள். ஆனால், அரசியலுக்கு வந்தால் எல்லாம் கேள்வி கேட்பார்கள். மனைவி குழந்தைகளை அவர் பிரிந்து வாழ்கிறார். அதுபற்றி அவர் வெளிப்படையாக பேசுவாரா?..

லஞ்சத்தை ஒழிப்பேன் என்கிறார். அவரின் ஒவ்வொரு படமும் வெளியாகும் போது அரசு நிர்ணயித்த விலையைட பல மடங்கு அதிகமாக தியேட்டரில் டிக்கெட் விற்கிறார்கள். இதை விஜய் ஒருபோதும் தடுத்தது இல்லை. அவரின் 'கோட்' படம் வெளியாகும்போது அப்படி டிக்கெட் விற்க கூடாது என விஜய் சொல்வாரா?..அப்படி சொன்னால் விஜய் லஞ்சத்தை ஒழிப்பார் என நாம் நம்பலாம்.

இதையும் படிங்க: தலைப்புலயே ப்ளாப் ஆன விஜய்! கட்சி பெயரை செலக்ட் செஞ்சதே இவர்தானாம்.. விளங்குமா கட்சி?

பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என சொல்லி இருக்கிறார். கட்சி ஆரம்பித்து வரும் முதல் தேர்தலையே புறக்கணித்தால் மக்கள் அவரை எப்படி நம்புவார்கள்?.. சரி.. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அவரின் ரசிகர்கள் காசு வாங்கி கொண்டு ஓட்டு போடுவார்களா? மாட்டார்களா?.. இல்லை தேர்தலை புறக்கணிப்பார்களா?..

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் துவங்கியது முதல் இப்போது வரை பெரிய கட்சிகளும் கூட்டணி அமைத்துதான் ஆட்சியை பிடித்தார்கள். எந்த கட்சியுடன் கூட்டணி இல்லை என்றால் எப்படி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க முடியும்?.. இதற்கெல்லாம் விஜயிடம் பதில் இல்லை’ என பயில்வான் ரங்கநாதன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மேலும், தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், கமல் ஆகியோர் படங்கள்தான் நல்ல வசூலை பெறுகிறது. விஜய் சினிமாவிலிருந்து விலகினால் அது சினிமாவை நம்பி வாழ்பவர்களுக்கு இழப்பு. எம்.ஜி.ஆர் போல சினிமாவில் நடித்துக்கொண்டே அரசியலிலும் அவர் இருக்கலாம். கமல் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார். பதவி கிடைத்த பின் விஜய் சினிமாவை விடலாம். ஆனால், இப்போது அவர் அப்படி சொல்லக்கூடாது என்றும் பயில்வான் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: நல்லா சொன்னீங்க!.. விஜய் அரசியல் இப்படித்தான் இருக்குமா? புளூ சட்டை மாறன் போட்ட பதிவு

 

Related Articles

Next Story