சம்பளத்தை ஏத்திய ஜெயம் ரவி!. குடும்பத்தில் வெடித்த பிரச்சனை!.. விவாகரத்துக்கு காரணம் இதுதானாம்!..
தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு எடிட்டராக வேலை செய்த மோகனின் மகன் ரவி. தெலுங்கில் ஹிட் அடித்த ஒரு படத்தை தமிழை ரீமேக் செய்து மோகனின் அண்ணன் ராஜா இயக்கிய ஜெயம் படம் மூலம் ஹீரோவாக நடிக்க துவங்கினார். முதல் படமே ஹிட் அடித்ததால் அடுத்தடுத்து படங்களில் நடித்தார்.
துவக்கத்தில் அண்ணன் ராஜாவின் இயக்கத்தில் தொடர்ந்து தெலுங்கு படங்களின் தமிழ் ரீமேக்கில் நடித்தார். ஒருகட்டத்தில் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடிக்க துவங்கினார். ஜெயம் ரவியை வைத்து படமெடுத்தால் நஷ்டம் இல்லை. ஓரளவுக்கு லாபம் என்கிற நிலையும் உருவானது.
ஆர்த்தி என்கிற பெண்னை காதலித்து 2009ம் வருடம் திருமணமும் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகன்களும் உண்டு. கடந்த 14 வருடங்களாகவே இருவரும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தனர். சமூகவலைத்தளங்களில் இருவரும் ஜோடியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில்தான், ஜெயம் ரவியும், ஆர்த்தியும் பிரியப்போவதாகவும், விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில்ல் விண்ணப்பித்திருப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் பரவியது. ஆனால், இதுபற்றி இருவருமே எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதேநேரம், கணவருடன் இருப்பதுபோல பகிரப்பட்ட புகைப்படங்களை ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார்.
எனவே, இது உண்மைதான் போல என பலரும் நினைத்தனர். இந்நிலையில், பலரின் அந்தரங்களை அலசும் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட வீடியோவில் ‘ஜெயம் ரவி அவரின் மாமியார் சுஜாதாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். அவர் நடிக்கும் படங்களை சுஜாதா தொடர்ந்து தயாரித்து வருகிறார்.
சமீபத்தில் இயக்குனர் பாண்டிராஜ் ஒரு கதை சொல்லி சுஜாதா அவருக்கு ஒரு கோடி அட்வான்ஸும் கொடுத்தார். 15 கோடி சம்பளம் வாங்கி வந்த ஜெயம் ரவி மாமியாரிடம் 25 கோடி சம்பளமாக கொடுங்கள் என கேட்டிருக்கிறார். எனவே, பாண்டிராஜிடம் பட்ஜெட்டை குறைக்குமாறு சொல்ல அவர் அட்வான்ஸை திருப்பிக் கொடுத்துவிட்டு விஜய் சேதுபதியிடம் கதையை சொல்லி அவரை வைத்து படமெடுக்க போய்விட்டார். இது ஜெயம் ரவிக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது.
‘உங்களுக்கு இப்போ மார்க்கெட்டே இல்லையே.. எதுக்கு 25 கோடி?’ என மாமியார் சுஜாதா கேட்க இதனால் பிரச்சனை துவங்கியது. இதில் ஆர்த்தியும் அம்மாவுக்கு ஆதரவாக கருத்து சொல்ல இருவருக்கும் சண்டை ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றுவிட்டது’ என பயில்வான் ரங்கநாதன் சொல்லி இருக்கிறார்.