Connect with us
banner

நீங்க எல்லை மீறி போய்ட்டீங்க…ரெடியா இருங்க!…எகிறிய சுசித்ரா!..பம்மிய பயில்வான்.!

Cinema News

நீங்க எல்லை மீறி போய்ட்டீங்க…ரெடியா இருங்க!…எகிறிய சுசித்ரா!..பம்மிய பயில்வான்.!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நல்ல காமெடி துணை நடிகராக வலம் வந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் சினிமாவில் நீண்ட வருடங்கள் பயணிப்பதால், தான் கேட்ட அனுபவங்கள் என்று தனக்கு தோன்றிய செய்திகளை (வதந்திகளை) அவ்வப்போது பல்வேறு சேனல்களில் விடியோவாக வெளியிட்டு வருகிறார்.

அப்போது, எத்தனை பெரிய ஹீரோவாகவோ, ஹீரோயினாக இருந்தாலும் சரி விட்டுவைப்பதில்லை. சளைக்காமல் அந்தரங்க விஷயம் வரை அலசி ஆராய்ந்துவிடுகிறார். அப்படி தான் அண்மையில் , பாடகி சுசித்ரா பற்றி கூறியுள்ளார்.

இந்த விடியோவை சுசித்ராவே பார்த்துவிட்டார் போலும். பார்த்து பயில்வான் ரங்கநாதனுக்கு போன் செய்துவிட்டாராம். அப்படி ஓரு ஆடியோவை பிரபல பத்திரிகை இணையதளம் தங்கள் இணையத்தள பக்கத்தில்  வெளியிட்டுள்ளது.

சுசித்ரா பேசுகையில், ‘ என்னை பற்றி நீங்கள் பைத்தியம் என்று சொல்லிருக்கீங்க, நான் யார் என்ன கேட்டாலும் குடுத்துருவேன், அதுவும், செக்ஷுவல் உதவி கூட செஞ்சு கொடுப்பார் என்றவாறு பேசிருக்கீங்க . போதைக்கு அடிமையானவர். இதனால் தான் கணவர் கார்த்திக் குமார் பிரிந்தார். என பேசிருக்கீங்க. அதுக்கெல்லாம் ஆதாரம் இருக்கா ? நீங்க எல்லை மீறி போய்ட்டிங்க.’ என கூறி கொந்தளித்து விட்டார் சுசித்ரா.

இதையும் படியுங்களேன் – நீங்களே இப்டி லீக் செஞ்சிடீங்களே.? கமல் அண்ணனுக்கு நன்றி கூறி மாட்டிக்கொண்ட ‘ரோலக்ஸ்’ சூர்யா.!

இதுக்கெல்லாம், ஏதேதோ பேசி நான் செய்தி தாளில் படித்தேன், உங்கள் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் கூறினார் என என்னென்னவோ பேசினார். இறுதியில் சுசித்ரா, நீங்க இது எல்லாத்தையும் போலீஸ் கிட்ட சொல்லுங்க, சீக்கிரத்துல இதுக்கு ரெடியா இருங்க என கூறியவாறு இருந்தார். அதற்கு பயில்வான் எந்த பதிலும் சொல்லவில்லை.

சுசித்ரா – ரங்கநாதன் உரையாடல் ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top