இவர்கள் கற்புக்கரசி கண்ணகியா?!.. மன்சூர் அலிகானுக்கு ஆதரவா களமிறங்கும் பயில்வான்...

Mansoor alikhan: ஒரு செய்தியாளர் சந்திப்பில் நடிகை திரிஷாவை பற்றி நடிகர் மன்சூர் அலிகான் பேசிய விவகாரம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு நடிகைகளையும் கோபப்படுத்தியுள்ளது. சமூகவலைத்தளங்களில் அவர்கள் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டு வருகிறார்கள்.

எப்போதும் மன்சூர் அலிகானுடன் நடிக்கமாட்டேன் என திரிஷாவும் கூறியுள்ளார். அதோடு, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இதுகுறித்து விளக்கமளிக்க நேரில் வரவேண்டும் என மன்சூர் அலிகானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகரும், செய்தியாளருமான பயில்வான் ரங்கநாதன் மன்சூர் அலிகானுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளார்.

இதையும் படிங்க: உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா?!. முட்டா கூ….ளா?!.. வெடித்த மன்சூர் அலிகான்!..

லியோ பட இசை வெளியீட்டு விழாவில் ‘இந்த படத்தில் எனக்கு ரேப் சீன் கிடைக்கும் என நினைத்தேன். இல்லாமல் போய்விட்டது’ என மன்சூர் அலிகான் பேசினார். திரிஷாவும் விஜயும் கூட அதைக்கேட்டு சிரித்தார்கள். அப்போது அவர் பேசியது தவறு என தெரியவில்லையா?..

இவர்கள் எல்லாம் என்ன கற்புக்கரசி கண்ணகியா?.. சினிமாவில் அவுத்துபோட்டு நடனம் ஆடுவதில்லையா?.. மதுபோதையில் நடுரோட்டில் அலப்பறை செய்த நடிகையை வீட்டிற்கு போய் கொண்டுவிட்டவர் மன்சூர் அலிகான். அதெல்லாம் மறந்துபோச்சா?.. ஜெயிலர் பட விழாவில் ‘தமன்னாவுடன் எனக்கு ஒரு காட்சி கூட இல்லை’ என வருத்தப்பட்டு ரஜினி பேசினாரே அது மட்டும் உங்களுக்கு சரியா?’ என கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: ரஜினி பேசலாம்.. மன்சூர் அலிகான் பேசக்கூடாதா?!.. திரிஷா விவகாரத்தில் வெடிக்கும் சர்ச்சை..

மேலும், மன்சூர் அலிகான் எப்போதும் விளையாட்டுத்தனமாக பேசுபவர். அப்படியே அவர் பேசியது மனதை புண்படுத்தியிருந்தால் அவர் வருத்தமும் தெரிவிக்கலாம். அவரிடம் விளக்கம் கேட்காமலேயே நடவடிக்கை எடுப்பதாக சொன்னது பெரிய தவறு. நடிகர் அஜித், நயன்தாரா ஆகியோர் தாங்கள் நடிக்கும் படங்களின் புரமோஷனுக்கே வருவதில்லை. நடிகர் சங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது? என்னை டார்கெட் செய்கிறார்கள் என மன்சூர் அலிகான் சொல்கிறார். இதில், என்னை பற்றியும் சில பத்திரிக்கையாளர்கள் மன்சூர் அலிகானிடம் கேள்வி எழுப்புகிறார்கள்.

நான் இதுவரை எந்த நடிகை பற்றியும் ஆதாரம் இல்லமால் பேசியது இல்லை. எனவே இனிமேல் என்னை நடிகையை பற்றி பேசுகிறார் என சொன்னால் கிழித்துவிடுவேன்’ என கோபமாக அவர் பேசினார்.

இதையும் படிங்க: த்ரிஷாவை மோசமாக கமெண்ட் அடித்த விவகாரம்.. மன்சூர் மீது பாயும் வழக்கு.. மகளிர் ஆணையம் காட்டிய அதிரடி..!

 

Related Articles

Next Story