Connect with us

Cinema News

பாக்கியலட்சுமி: அடேய் அப்புரசட்டிங்களா இருக்க பிரச்னையில்ல நீங்க வேறயா… கடுப்பான பாக்கியா..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் நடு இரவில் தூக்கம் வராமல் தவித்து கொண்டிருக்கும் செழியன், மாலினியை பார்க்க போகலாம் எனக் கிளம்புகிறார். ஆனால் ஹாலில் படுத்து இருக்கும் பாக்கியாவை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். ரூமுக்கு வரும் செழியனுக்கு மாலினி போட்டோவை அனுப்பி தொல்லை கொடுக்கிறார்.

வீட்டை விட்டு வெளியே போகாமல் ரூமுக்கே திரும்பி விடுகிறார் செழியன். இப்டி நம்ம செஞ்சிருக்கவே கூடாதே என செழியன் வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறார். காலையில் வாசலை தெளித்து கோலம் போட வரும் அம்ருதாவை மறைந்து இருந்து பார்க்கிறார் கணேஷ். அப்போது அவர் கழுத்தில் தாலி தொங்கி கொண்டு இருப்பதை பார்த்து ஆத்திரமாகிறார்.

இதையும் படிங்க: கோயிந்தா கோயிந்தா!.. லியோ படம் நல்லா வசூல் ஆகணும் கோயிந்தா.. லோகேஷ் எங்கே இருக்காரு பாருங்க!..

அம்ருதாவிடம் பேச நெருங்கும் போது பாக்கியா வெளியில் வர உடனே ஓடி மறைந்து கொள்கிறார். வெளியில் யாரோ இருப்பதை பார்த்து அருகில் வரும் பாக்கியாவிடம் இருந்து சிக்காமல் ஓடி விடுகிறார் கணேஷ். அதை தொடர்ந்து ஜெனியை குடும்பமே பார்த்து பார்த்து கவனித்து கொள்கின்றனர்.

அந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வரும் மாலினி பாக்கியாவிடம் செழியன் இல்லையா எனக் கேட்கிறார். இதனால் ஷாக் ஆகும் செழியனை கடந்து உள்ளே சமையலறைக்குள் செல்கிறார். டைனிங் டேபிளில் உட்கார்ந்து எல்லாருடனும் பேசிக்கொண்டு இருக்கிறார். ராமமூர்த்தியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க அனைவருக்கும் ஆச்சரியமாகி விடுகிறது.

இதையும் படிங்க: அவன் நடிச்ச படமா ஓடுச்சு.. நான் தான் ஹிட் மெஷின்.. ஹீரோவை விட அதிகமாக சம்பளம் கேட்கும் வில்லன்?

மாலினி நான் செழியனோட பிரண்ட், கூட வேலை செய்றேன் எனச் சொன்னாலும் அவர் பேசுவதையும், செழியன் முழிப்பதை பார்த்து பாக்கியாவிற்கு சந்தேகம் வந்து விடுகிறது. வீட்டுக்கு கிளம்பும் மாலினி நீ வர மாட்டேனு சொல்லிட்ட. இனி நான் வருவேன். இது சாம்பிள் தான். இனி போறப்ப சும்மா போக மாட்டேன் என மிரட்டி விட்டு செல்கிறார்.

ஏற்கனவே பாக்கியா வாழ்க்கையில் பிரச்னை இருக்க தற்போது எழில் மற்றும் செழியனுகு ஏபட்டு இருக்கும் பிரச்னையை பாக்கியா எதிர்கொள்ள இருப்பது தான் அடுத்தடுத்த எபிசோட்டில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top