திருமண கோலத்தில் வந்திறங்கிய கதிர், ராஜீ… பாக்கியா பார்த்த அதிர்ச்சியில் கோபி…

by Akhilan |
திருமண கோலத்தில் வந்திறங்கிய கதிர், ராஜீ… பாக்கியா பார்த்த அதிர்ச்சியில் கோபி…
X

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோமதி அம்மாவை பார்க்க அவரிடம் அண்ணிகள் இருவரும் புலம்பி கொண்டு இருக்கின்றனர். கல்யாண விஷயம் தெரிஞ்சா என்ன ஆகுமோ என மீனாவிடம் புலம்பி கொண்டு இருக்கிறார் கோமதி. அடுத்து கோபி, ராதிகா, இனியா சொல்லிவிட்டு ஊருக்கு கிளம்ப தயாராகி வருகின்றனர்.

பாட்டி பத்திரமாக போய் வருமாறு சொல்கிறார். அந்த நேரத்தில் ஒரு கார் வந்து நிற்கிறது. அந்த நேரத்தில் பாண்டியன் குடும்பத்தினரும் வாசலில் வந்து நிற்க கோமதி பதற்றத்தில் நிற்கிறார். பாக்கியாவை பார்த்ததும் இனியா என்ன ஊருக்கு போகலையா நீ எனக் கேட்க அப்போ அவர் கார் கதவை திறக்க ராஜீ இறங்குகிறார்.

இதையும் படிங்க: சண்டை போட்டு கொள்ளும் முத்து, ஸ்ருதி… ரூமுக்குள் செட்டிலான விஜயா… மீண்டும் பழைய கதையா?…

குடும்பமே அதிர்ச்சியாகி நிற்கின்றனர். பாட்டி ஓடிவந்து ராஜீ எப்படியம்மா இருக்க நான் பயந்தே போயிட்டேன் எனப் பேசிக்கொண்டு இருக்க அவர் கழுத்தில் இருந்த தாலியை பார்த்து ஷாக் ஆகிவிடுகிறார். எல்லாரும் யார் உன்னை கூட்டிட்டு போனது என சத்தம் போடுகின்றனர்.

அப்போ எழில் கார் கதவை திறந்து கதிரை கூட்டிவருகிறார். பாண்டியன் குடும்பத்தினர் அதிர்ச்சியாகி விடுகின்றனர். ராஜீயை ஏமாத்தி கடத்திட்டு போயிருப்பான் என எல்லாரும் அடிக்க பாய பாக்கியா நிறுத்தி இவங்களை நான் திருச்செந்தூரில் பார்த்தேன். எனக்கு உதவு செஞ்சாங்க.

காலையில் மூணு பேரும் ஊருக்கு கிளம்பிட்டாங்க. அப்புறம் இந்த பையனோட உங்க பொண்ணை பார்த்தேன். விசாரிச்சப்போ கல்யாணம் செஞ்சிக்கிட்டாங்கனு தெரிஞ்சிது. அதனால் தான் கூட்டிக்கிட்டு வந்தேன் என்கிறார். இருந்தும் யாரும் நம்பாமல் சத்தம் போட்டுக்கொண்டு இருக்கின்றனர். சக்திவேல் உன் பையன் செஞ்சதை பார்த்து நாங்க சிரிச்சோம் தானே.

இதையும் படிங்க: ஜனகராஜுக்கு பேர் வாங்கி கொடுத்த அந்த காமெடி!.. எல்லாத்துக்கும் ரஜினிதான் காரணமாம்!..

Next Story