பாக்கியாவுக்கு அடுத்த சோதனையா? மீண்டும் ஆரம்பிக்கும் இனியா மற்றும் எழில் பிரச்னை!...

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பழனிசாமி, பாக்கியாவிடம் காசை கொடுக்க அவர் அன்புக்கு விலை பேசாதீங்க எனக் கூறிவிடுகிறார். அதை கேட்டு பழனிசாமி சந்தோஷப்படுகிறார். பின்னர் காரில் கிளம்பி செல்லும் போது பாக்கியா சொன்னதையே நினைத்து கொண்டு செல்கிறார்.

அப்போ அங்கிருந்த சிக்னலை பார்க்காமல் சென்றுவிட போலீசார் அவரை பின்னால் துரத்தி வருகின்றனர். அவரை வளைத்து பிடித்து சிக்னலை தாண்டி வண்டியை ஓட்டிக்கிட்டு வரீங்க. அபராதம் எடுத்து வையுங்க என்கின்றனர். உடனே அன்புக்கு விலை பேசாதீங்க என பழனிசாமி கூற போலீசார் முழிக்கின்றனர். பின்னர் காசை கட்டிவிட்டு அவர் செல்கிறார்.

இதையும் படிங்க: கவுண்டமணி எப்பவுமே அப்படித்தான்!.. ஒன்னு நடக்காம போச்சி!.. ஃபீல் பண்ணி பேசும் ராமராஜன்..

விமல் ஏற்கனவே தனியாக வந்து செல்வியிடம் இருந்து இனியா நம்பரை எடுத்து விடுகிறார். அந்த நம்பருக்கு கால் செய்து சிவகார்த்திகேயன் மேனேஜர் பேசுவதாக பொய் கூறுகிறார். இதில் கடுப்பாகும் இனியா போலீசில் கம்ப்ளைன்ட் செய்து விடுவேன் என மிரட்டுகிறார். பின்னர் அவர் முன் வரும் விமல் சொன்ன மாதிரியே செஞ்சிட்டேன்ல என இனியாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

பின்னர் வீட்டில் எழில் மற்றும் அமிர்தா ஹாலில் அமர்ந்திருக்க அப்போது அமிர்தா அம்மா அங்கு வருகிறார். அவர் எல்லாரிடம் பேசிவிட்டு நிலாவை கொஞ்சிக் கொண்டிருக்க ஈஸ்வரி முகம் கொடுக்காமல் இருப்பதை கவனித்து விடுகிறார். பின்பு சமையலறைக்கு வந்து அமிர்தாவிடம் என்ன பிரச்சனை என கேட்க அவர் குழந்தை விஷயத்தில் நடந்ததை கூறுகிறார்.

இதையும் படிங்க: நான் அப்பவே இறந்திருப்பேன்! உருக்கமாக பேசிய ராமராஜன்.. இப்படியெல்லாம் நடந்திருக்கா

அமிர்தா அம்மாவும் நானும் அதைத்தான் சொல்கிறேன். நீ ஒரு குழந்தை பெற்றுக்கொள் என்கிறார். எனக்கும் ஆசைதான். ஆனால் ஏன் இப்போது வேண்டாம் எனக் கூறுவதாக அமிர்தா கூறுகிறார். இதை அடுத்து ஈஸ்வரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அமிர்தாவுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைதான். மாப்பிள்ளை தான் அதற்கு முட்டுக்கட்டை போடுவதாக அமிர்தாவின் அம்மா ஈஸ்வரிடம் சொல்லிவிடுகிறார். இதனுடன் இன்று எபிசோட் முடிந்தது.

 

Related Articles

Next Story