Connect with us

Cinema News

பாக்கியாவை பார்த்து உருகும் பழனிசாமி… இப்போவே ரோமியோவா ஆகிட்டாரே!..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பழனிச்சாமி சுற்றி எழில், விமல், ராமமூர்த்தி உட்கார்ந்து இருக்கின்றனர். விமல், மாமா எப்ப தான் உங்களுக்கு கல்யாணம் என்று கேட்க நீயும் கேட்க ஆரம்பிச்சிடுயாடா என்று பழனிச்சாமி சொல்கிறார். 

எழில் உங்களுக்கு பிடிச்ச பொண்ணை பார்க்க ஈஸியா இருக்கும்ல எனக் கேட்கிறார். அப்போ பழனிசாமி, நான் சொல்லாமலே எனக்கு பிடிச்சதை செஞ்சிரணும் என்கிறார். பாக்யா ஸ்வீட்டை கொண்டு வந்து சாப்பிட கொடுக்கிறார்.  அதை சாப்பிடும் பழனிசாமி நான் நினைச்ச மாதிரியான டேஸ்ட்ல இருக்கே என சந்தோஷப்படுகிறார். 

இதையும் படிங்க: மனோஜ் மற்றும் ரோகிணியை மிரளவிட்ட விஜயா… அடடே! நல்லா சூடு பிடிக்குதே!

அடுத்து என் அம்மாவை பார்த்துக்கணும் என்கிறார். அங்கு நின்று கொண்டே இருக்கும் பழனிசாமி அம்மாவை பாக்கியா உட்காருங்க என பார்த்து கவனிக்கிறார். என் அக்கா, தங்கைகளை அவங்க சொந்தமா பார்க்கணும் எனக் கூறுகிறார். ஸ்வீட்டை அவர்களுக்கு கொடுக்க வந்த பாக்கியா தவறுதலாக கொட்டி விடுகிறார்.

அதை தன்னுடைய புடவையிலேயே துடைத்து விடுகிறார். இதையெல்லாம் விடுங்க. ஆள் எப்படி இருக்கணும் என செல்வி கேட்க அவங்களை பார்த்தா எனக்கு லைட் எரியுணும் எனக் கூறிவிடுகிறார். அந்த சமயத்தில் ஆஃபான ஸ்விட்ச் ஆன் செய்யப்படுகிறது. இதை பார்த்த பழனிசாமி, பாக்கியாவை பார்த்து ரொமான்ஸ் செய்கிறார்.

இதையும் படிங்க: நானும் சூர்யாவும் ரெடி.. பெண் இயக்குனர்களுக்கு தில்லாக சவால் விட்ட ஜோதிகா

எல்லாரும் கிளம்ப இருக்க பாக்கியா வீட்டில் பேசிவிடலாமா என பழனிசாமி அக்கா, தங்கை பேசிக்கொண்டு இருக்கின்றனர். அய்யோ நான் சொல்றவரை எதுவும் பேசிடாதீங்க எனச் சொல்லிவிடுகிறார். வீட்டில் பழனிசாமிக்கு பெண்ணு பார்க்கணும் என குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருக்கிறார் பாக்கியா. இன்றைய எபிசோட் முடிந்தது.

google news
Continue Reading

More in Cinema News

To Top