குழந்தை சண்டையை மீண்டும் தொடங்கிய ஈஸ்வரி.. கோபிக்கு நேரம் சரியில்லை…
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் அமிர்தாவின் அம்மா குழந்தை பெத்துக்க அமிர்தாவுக்கு சம்மதம் தான். மாப்பிள்ளை தான் ஒப்புக்கலை என ஈஸ்வரியிடம் சொல்கிறார். உடனே ஈஸ்வரி அவன் அப்படி தான் இப்படி சொன்னா அப்படி சொல்லுவான் என்கிறார்.
அவங்க சீக்கிரம் பேரனோ, பேத்தியோ பெத்துக்கொடுப்பா எனச் சொல்லிவிட்டு செல்கிறார். அமிர்தாவிடமும் பெரியவங்க பேச்சை கேட்டு நடந்துக்கோ என்கிறார். அடுத்ததாக வீட்டுக்கு சிரித்துக்கொண்டே வருகிறார் பழனிசாமி. அதை கவனிக்கும் அம்மாவும், அக்காவும் பாக்கியாகிட்ட பேசலாமா என்கிறார்.
இதையும் படிங்க: ஒரே தீபாவளிக்கு ரிலீஸான கமல்ஹாசனின் நான்கு திரைப்படங்கள்…இதில் எந்த படம் சூப்பர்ஹிட் தெரியுமா?
உடனே பழனிசாமி, எனக்கு தோணும் போது சொல்வதாக சொல்கிறார். ஆனால் அவருக்கு ஒரு ப்ரியம் இருப்பது அவர்களுக்கு புரிந்துவிடுகிறது. அடுத்து, பாக்கியா ரெஸ்டாரெண்டுக்கு கூட்டம் கூடிக்கொண்டு இருக்கிறது. பார்க்கிங் ஆரம்பிச்சது இதுக்கு ஒரு காரணம். அருகில் ஒரு திருவிழா நடக்கிது. இன்னும் கூட்டம் அதிகம் ஆகும்.
அதனால் அதிகமா சமைக்கலாம் என தன்னுடைய டீமில் சொல்கின்றார். கோபி தன்னுடைய செஃபிடம் கோபமாக நடந்து கொண்டு இருப்பதை பார்த்து ராதிகா கடுப்பாகிறார். பஸ் ஸ்டாண்டுக்கு அமிர்தா அம்மாவை அழைத்து செல்லும் எழிலிடம் பாட்டி கேட்பதில் தப்பு இல்லையே. நான் ஒரு பையன் வச்சிருந்தாலும் இப்படி தானே யோசிப்பேன் என்கிறார்.
இதையும் படிங்க: தளபதி69 படத்தின் ஹீரோயின் இவரா? அடுத்த இரண்டாவது இன்னிங்ஸா இருக்குமே!..
எனக்கு எல்லாம் புரியுது. ஆனா நான் நிலாவை பத்தி யோசிக்கணும். எங்களுக்கு தோன்றப்ப நாங்க குழந்தை பெத்துக்கணும். அப்போ நடக்கும் எனக் கூறிவிடுகிறார். வீட்டுக்கு வரும் எழில், ஈஸ்வரியிடம் குழந்தை விஷயத்தினை பத்தி அமிர்தா அம்மாவிடம் சொன்னீங்களா என்கிறார். ஆமா பேசுனேன் என்கிறார் ஈஸ்வரி. பேசாதீங்கனு சொல்லி இருக்கேன்ல என எழில் கூற நடக்குற வரை அதை சொல்லிட்டே இருப்பேன் என ஈஸ்வரி கடுப்படிக்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.