Connect with us

Cinema News

பிரச்னையை இப்போ பாக்கியா – கோபி பக்கம் திரும்பியாச்சு போலயே… ஈஸ்வரி தான் மோசம்!

Bakkiyalakshmi: இன்றைய எபி்சோட்டில் பாக்கியாவின் ரெஸ்டாரண்டுக்கு வரும் கஸ்டமர்கள் கார் நிறுத்த இடம் இல்லாததால் வேறு ஹோட்டல் நோக்கி சென்று விடுகின்றனர். இதை அங்கு வரும் பழனிச்சாமி கவனித்து விடுகிறார். நான் முதல் நாளை கவனித்தேன் அன்னைக்கே சொன்னால் நெகட்டிவா தோணும் என விட்டுவிட்டேன் என்கிறார்.

இதற்கு ஒரு வழி செய்யலாம் என பாக்கியவிடம் பேசிக்கொண்டே அவர் உள்ளே செல்ல இவர்களை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார் செல்வி. எங்களை பார்த்தால் எப்படி தெரியுது எழிலிடம் கேட்க நல்ல பிரண்ட் மாதிரி தெரியுது என்கிறார். அக்காவை இப்படியே விட்றலாமா அவங்களுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்க வேணாமா என செல்வி கேட்கிறார்.

இதையும் படிங்க: ரசிகர்கள் முட்டாளா? புரோமோஷனில் இறங்கினாலும் உங்க கெத்த விடமாட்றீங்களே அஜித் சார்…

எழில் இந்த விஷயத்தை நான் ஏற்கனவே அம்மாவிடம் பேசி அடி வாங்கி இருக்கிறேன் எனச் சொல்லி சிரிக்கிறார். இதை எடுத்து அங்கிருந்து கிளம்பும் பழனிச்சாமி பார்க்கிங் பிரச்சினை குறித்து  யோசித்துக் கொண்டிருக்க சில இடம் தாண்டி ஒரு காலி கிரவுண்டை கண்டுபிடிக்கிறார்.

அந்த இடத்தின் ஓனரை கண்டுப்பிடித்து அவரிடம் பேசிவிட்டு நேராக பாக்கியாவிடம் வருகிறார். அவர் என்னால் பெரிய அளவில் வாடகை கொடுக்க முடியாது எனக் கூறிவிட இதை முதலீடா பாருங்க என்கிறார். சரி பேசலாம் என்கிறார் பாக்கியா. உடனே பழனிசாமி சரி முடிச்சிடலாம். இப்போ நான் கிளம்புறேன் எனச் சொல்லி சென்றுவிடுகிறார்.

வீட்டில் செழியன் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்கிறார் ஈஸ்வரி. அப்போ அங்கு நிலா வர அவருடன் வந்து ராமமூர்த்தியும் உட்காருகிறார். நிலா சாக்லேட் வேணும் என கேட்க அதுக்கு தான் ரெடியாகி வந்திருக்கேன் தாத்தா போய் வாங்கிட்டு வந்துடறேன் என கிளம்பி செல்கிறார். இதைத்தொடர்ந்து ஈஸ்வரி அருகில் இருக்கும் நிலாவே தள்ளி உட்கார சொல்கிறார்.

இதையும் படிங்க: எந்த தைரியத்துல வந்த? ரஜினியை தேடி வந்தது குத்தமா? பாலசந்தர் கேட்ட கேள்வியால் ஆடிப்போன இயக்குனர்

பின்னர் நிலாவை சோபாவில் இருந்து இறங்கி நிற்குமாறு கூற இதை அங்கு வரும் ராதிகா பார்த்து விடுகிறார். அவர் நிலாவை அழைத்துச் சென்று வாசலில் விளையாடிக் கொண்டிருக்கிறார். அப்போ எழில் வர அவரிடம் அப்பாவின் ஓடி தாவிக் கொள்கிறார் நிலா. அவரை தூக்கி கொன்றுகொண்டே வரும் எழிலிடம் பாட்டி என்ன திட்டினாங்கப்பா என்கிறார் நிலா.

உடனே ஈஸ்வரி நான் எப்போ உன்னை திட்டினேன். குழந்தையை தொட்டு கொஞ்சம் தானே சொன்னேன். நீ சின்ன புள்ள உனக்கு நாங்க தானே சொல்லி கொடுக்கணும் என்கிறார்.  இதனால் முகம் மாறும் எழில் மாடிக்கு நிலாவை கூட்டிச் செல்கிறார். கோபி ரெஸ்டாரெண்டின் செஃப் புது டிஸ் செஞ்சதாக கொண்டு வந்து நீட்டுகிறார்.

அதை சாப்பிட்டுவிட்டு ஆஹா ஓஹோ என கோபி புகழ் பாடிக்கொண்டே இருக்கிறார். ராதிகா வேண்டாம் என கண்ணை காட்டுகிறார். பின்னர் அவர் போனதும் இப்படி ஆஹா ஓஹோனு பேசாதீங்க. அப்புறம் அவர் பேச்சை நாம கேட்டு நடக்கும் நிலை வந்துரும். கொஞ்சம் கண்டிப்பா இருங்கனு சொல்லி செல்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: ஆக்‌ஷனுக்கு ஹரினா அவருடைய மகன்? இந்த மாதிரி ஒரு படமா.. சைலண்டா இருந்து சாதிச்சிட்டாரே

google news
Continue Reading

More in Cinema News

To Top