லவ்ஸில் இறங்கிய பழனிசாமி… கொஞ்சம் மொக்கையா போகுதே… கடுப்பில் ரசிகர்கள்…
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பழனிச்சாமி வீட்டுக்கு வரும் பாக்கியா. அவருக்குப் பிடித்த எண்ணெய் கத்திரிக்காய், இறால் குழம்பு கொண்டு வந்து தருகிறார். வாசனையே கமகமனு இருக்கே என எல்லாரும் சாப்பிடுகின்றனர். பின்னர் பேசிவிட்டு பாக்கியா கிளம்பும் பொழுது கேப் புக் பண்ண பார்க்கிறார்.
ஆனால் பழனிச்சாமியின் அக்கா வீட்டில் இத்தனை கார் இருக்கும் போது எதற்கு கேப். பழனிச்சாமியே உங்களைக் கொண்டு போய் விடுவான் என சொல்லி அவருடன் அனுப்பி வைக்கிறார். காரில் இருவரும் பேசிக்கொண்டு செல்கின்றனர். அப்பொழுது பாக்யாவிடம் உங்களுக்கு என்ன பிடிக்கும் என பழனிச்சாமி கேட்கிறார்.
இதையும் படிங்க: ஆரம்பிச்சா தாங்க மாட்டீங்க! அடக்கி இருக்கிறவனை வெடிக்க வச்சிராதீங்க.. என்னாச்சு வடிவேலுவுக்கு?
இதுவரை யாரும் என்னிடம் இப்படி கேட்டதில்லை. எனக்கு எங்க அம்மா செய்யும் பால் கொழுக்கட்டை ரொம்ப பிடிக்கும். ஆனால் எப்படி ட்ரை செய்து பார்த்தோம் அவர் கொடுக்கும் சுவையில் தர முடியவில்லை என கவலைப்பட்டுக் கொள்கிறார். இதை மனதில் குறித்துக் கொண்ட பழனிசாமி உங்களுக்கு பிடித்த மாதிரி பால் கொழுக்கட்டை செய்து தருவேன் என பேசிக்கொள்கிறார்.
ரெஸ்டாரண்டில் அமிர்தா மற்றும் எழில் இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அங்கு வரும் செல்வி என்ன காதல் ஜோடி மாதிரி பேசிக்கிட்டு இருக்கீங்க எனக் கலாய்க்கிறார். அந்த நேரத்தில் பழனிச்சாமி மற்றும் பாக்கியா சரியாக வந்து இறங்குகின்றனர். இதோ இன்னொரு காதல் ஜோடி வந்துட்டு எனக் கலாய்க்கிறார். எழிலிடம் திரும்பும் செல்வி, அக்காவுக்கு அண்ணனை பிடித்து இருந்தால் என்ன செய்வீங்க என கேட்கிறார்.
இதையும் படிங்க: கமலை பார்த்து டென்ஷன் ஆன விஜயகாந்த்… எதுக்குன்னு தெரியுமா? அந்த குணா என்ன சொல்றார்னு பாருங்க…
எழில் யோசிக்காமல் கல்யாணம் செஞ்சு வச்சிட வேண்டியதுதான் என்கிறார். அப்போ அங்கு வரும் பாக்கியா பேசிக் கொண்டிருங்கள் என உள்ளே செல்கிறார். வீட்டில் செழியன் மற்றும் ஜெனி குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்வுக்கு அழைக்க ஜெனி வீிட்டுக்கு செல்கின்றனர். உங்க கோயிலில் வைப்பீங்க தானே என ஜோசப் கடுப்பில் கேட்கிறார்.
ஆனால் பாக்கியா இல்லை வீட்டில் தான் வைக்கிறோம். பின்னர் உங்க கோயிலுக்கு கூட்டிக்கிட்டு போய் வைங்க என்கிறார். இதையடுத்து அவர்கள் கிளம்பியதும் மரியம், ஏன் அப்படி பேசுனீங்க? நம்ம ஜெனி பங்ஷனுக்கு போய் தான் ஆகணும் என கறாராக சொல்லிவிட்டு செல்வதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.
COPYRIGHT 2024
Powered By Blinkcms