எம்மா நீங்க தியாகி தான்… ராதிகா கர்ப்பம் குறித்து அறிந்து பாக்கியா சொன்ன அந்த வார்த்தை!...
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாக்கியா அமைதியாக உட்கார்ந்து காபியை ரசித்து குடித்து கொண்டு இருக்கிறார். அப்போ அங்கு மயூ வர அவரை பார்த்து சிரிக்கிறார். வா மயூ என அவரை அழைத்து உட்கார வைத்து ஸ்நாக்ஸ் தருகிறார். மயூ சாப்பிட்டுவிட்டு அம்மாக்கு சாப்பாடு கொண்டு வந்ததாக சொல்கிறார்.
அம்மா வாந்தி எடுத்துக்கிட்டே இருக்காங்க. இருந்தாலும் எனக்கு சந்தோஷம் தான். என் பிரண்ட்ஸ் கிட்ட சொன்னேன். அவங்களும் ஹேப்பி என ராதிகா கர்ப்பத்தினை உளற போக ராதிகா வந்து தடுத்துவிடுகிறார். ராதிகாவை பார்த்து மயூ சிரித்து கொண்டே நீங்க ஏன் புளிப்பா சாப்பிடுறீங்க என்கிறார். எனக்கு அதையே கொடுத்தாங்க.
இதையும் படிங்க: பழனிக்கே பால் காவடி எடுத்தாலும்!.. கில்லி ரீ ரிலீஸ் முதல் நாள் வசூலை முந்தாத விஷாலின் ரத்னம்!..
ஆனா சாப்பிட முடியலை என மயூ கூற பாட்டி நிறைய புளி போட்டு இருப்பாங்க என சமாளிக்கிறார். இதையடுத்து எழில் மற்றும் அமிர்தா வெளியில் கிளம்பி இருக்கின்றனர். ஈஸ்வரியை கூப்பிட அப்போ அங்கு நிலா வருகிறார். பாட்டி என் டிரெஸ் எப்படி இருக்கு எனக் கேட்க உனக்கு என்ன அழகா இருக்க என பாராட்டுகிறார். பின்னர் எழிலிடம் உன்கிட்டையே நான் பேசலை.
நீ கூப்பிடுற இடத்துக்கு நான் வரமாட்டேன். நிலாவை கல்யாணம் பண்ணிக்கொடு தப்பே இல்லை. ஆனா அவ உன் பொண்ணு இல்ல. வளர்ந்த பின்னர் உன்னை அப்பானு கூட கூப்பிடாம போயிடுவா எனக் கஷ்டப்படுத்துகிறார். பின்னர் ராதிகா அவங்க அம்மாக்கு கால் செய்து மயூக்கிட்ட எதுக்கு சாப்பாடு கொடுத்துவிட்ட என்கிறார். அவ உளறி இருப்பா எனத் திட்டுகிறார். அப்போ இன்னும் சொல்லலையா எனக் கேட்கிறார்.
இதையும் படிங்க: எப்பாடி… இவ்வளவு பெரிய தொகையா? புளூசட்டை மாறன் யூட்யூப் மாத வருமானம் என்ன தெரியுமா?
அப்போ கோபி வீட்டுக்கு வர ஏன் இன்னும் சொல்லலை. வாங்க நான் சொல்றேன் என கோபியை அழைக்கிறார். வேண்டாம் அத்தை. நானே சொல்லிக்கிறேன் என்கிறார் கோபி. இதையடுத்து மாடியில் அம்மாவுடன் கால் செய்து பேசிக்கொண்டு இருக்கிறார் ராதிகா. பின்னர் கீழே ராதிகா இறங்க போக மயக்கம் வர தடுமாறி விடுகிறார். அவரை பிடிக்கும் பாக்கியா நீங்க செய்றத பாத்தா.
கர்ப்பமா இருக்கவங்க செய்றது போல இருக்கே எனக் கேட்கிறார். நீங்க கர்ப்பமா இருக்கீங்களா என்று பாக்கியாவிடம் கேட்க ராதிகா டாக்டர் கிட்ட போய் செக் பண்ணிட்டோம். கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க. நாங்க ரெண்டு பேருமே இதை எதிர்பார்க்கல என்று சொல்ல பாக்யா நல்ல விஷயம் தானே என்று கூறுவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.
இதையும் படிங்க: விஜய்யை விட நான் சின்ன பொண்ணா?.. வயதை வெளிப்படையாக சொன்ன கில்லி அம்மா!..