Categories: latest newstelevision

கோபியை மிரட்டிவிட்ட பாக்கியா… சைட் கேப்பில் லவ்சா… முடியலையப்பா!… எங்கள விட்ருங்க…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பழனிச்சாமி டீ சர்ட் போட்டுக்கொண்டு கீழே வந்து நிற்க அவர் அம்மா யார் தம்பி நீ என கேட்கிறார். அம்மா நான் தான் என பழனிச்சாமி சொல்ல பார்க்க அழகா இருக்குப்பா என பாராட்டுகிறார். பின்னர் உங்க அப்பா கனவில் வந்து உனக்கு கல்யாணம் சீக்கிரம் ஆகும் என கூறியதாகவும் தெரிவிக்கிறார்.

அதன்பின் பழனிச்சாமி பாக்கியாவை பார்க்க ரெஸ்டாரண்டுக்கு கிளம்பி செல்கிறார். அங்கு ஆர்டர் கொடுத்தவர்  நேரமாவதால் சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார். பின்னர் அங்கு வரும் பாக்கியா அவருக்கு ஆர்டரில் இருந்து 50% தள்ளுபடியும் ஒரு கூல்ட்ரிங்க்ஸ்யும் கொடுத்து சமாதானம் செய்கிறார்.

இதையும் படிங்க: நடிகரின் கெட்டப்பழக்கத்தால் படாத பாடுபட்ட ஸ்ரீதேவி!.. மனுசன் ரொம்ப டெராரா இருப்பார் போல!..

ரெஸ்டாரண்டுக்கு வரும் பழனிச்சாமியின் டிரசை பார்க்கும் அமிர்தா மற்றும் செல்வி இருவரும் ஆச்சரியமாக பார்க்கின்றனர். பின்னர் உள்ளே சென்று பாக்யா எதுவும் சொல்வாரா என பழனிச்சாமி பார்க்க ஆனால் அவரோ நீங்க கொடுத்த புக்கை வச்சி இன்னைக்கு ஒரு கஸ்டமரிடம் ஏற்பட்ட பிரச்சனையை சமாளிச்சிட்டேன் என சந்தோஷமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இது சரிப்பட்டு வராது என கிளம்பிச் செல்லும் பழனிசாமியை ஒரு நிமிஷம் என அழைக்கிறார் பாக்கியா. அவர் ஆசையாக திரும்பிப் பார்க்க அம்மா நாட்டுக்கோழி குழம்பு வச்சு தர கேட்டாங்க அடுத்த வாரம் செஞ்சு தருவதாக சொல்லி அனுப்புகிறார். இதனால் முகம் வாடி கிளம்பி விடுகிறார் பழனிசாமி. அதன் பிறகு ரெஸ்டாரண்டில் வேலை செய்யும் பெண் தன்னுடைய தங்கை கர்ப்பம் எனக் கூறி லீவ் கேட்கிறார். அப்பொழுது பாக்கியாவிற்கு ராதிகாவின் கர்ப்பம் ஞாபகம் வருகிறது.

இதையும் படிங்க:கியாரா அத்வானி எல்லாம் கால் தூசுக்கு வருமா!.. இந்த வயசுலயே இப்படி ஜொள்ளு விட வைக்கிறாரே ஸ்ரீதேவி!..

இந்த நேரத்தில் அங்கு வரும் செல்வி பழனிச்சாமி அண்ணனின் ட்ரெஸ் குறித்து கேள்வி கேட்கிறார். அதில் கடுப்பாகும் பாக்கியா யார் எந்த நிலைமையில் இருக்காங்கன்னு தெரியாம நீ வேற எதையாவது பேசாத என்கிறார். இதை தொடர்ந்து செல்வியிடம் அமிர்தா பழனிசாமி சாரை அம்மா பிரண்டா தான் பார்க்கிறாங்க என்கிறார்.

வீட்டிற்கு வரும் கோபி தன்னுடைய க்ளவுட்கலாவுக்கு கிச்சன் பிசினஸ் குறித்து ரொம்ப பெருமையாக பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போ அங்கு நிற்கும் பாக்கியா அவரை மட்டமாக பார்க்கிறார். பின்னர் கத்தியை காட்டி மிரட்டுவதுடன் அங்கிருது ஓடிவிடுகிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Akhilan

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

7 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

8 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

8 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

9 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

15 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

16 hours ago