கோபிக்கு ஆளுக்கு ஆள் டயலாக் விடுறாங்களே… என்னங்க இது அநியாயமா இருக்கே…பாவமில்ல அவரு!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபி ரெஸ்டாரெண்டுக்கு பாக்கியா உணவுகளை வந்து டெலிவரி செய்துவிடுகிறார். யாரோ சொன்னாங்க பிசினஸ் செய்ய தெரிஞ்சா போதும். சமைக்க தெரியணும்னு அவசியம் இல்லனு? இந்த தொழிலில் சமையல் தெரியாம பண்ணா கஷ்டம் தான் என்கிறார்.
இதனால் கோபிக்கு அவமானமாகி விடுகிறது. நைசாக எஸ்கேப் ஆனவரை பார்த்து ஆர்டருக்கு காசு எடுங்க என்கிறார். அக்கவுண்டில் வந்துடும் என்கிறார். பாக்கியா நக்கலாக நம்பலாமா எனக் கேட்க நான் வாங்கி தரேன் என்கிறார் ஈஸ்வரி. அடுத்து வீட்டுக்கு வரும் பாக்கியா ரெஸ்டாரெண்டில் நடந்த விஷயத்தினை சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: பாஸ்வேர்ட் சொன்ன எம்.ஜி.ஆர்!.. அள்ளிக்கொடுத்த ‘ஆளவந்தான்’!… கையிலெடுத்த ‘கோச்சடையான்’!
அந்த நேரத்தில் ராதிகா வர அவரிடம் கொளுத்தி போடுகிறார் செல்வி. இதனால் கடுப்பாகும் ராதிகா நேராக கோபியிடம் போய் எப்படி பிரச்னையை சமாளிச்சீங்க எனக் கேட்க எங்க அம்மா வந்தாங்க. கடகடனு எல்லாத்தையும் முடிச்சிட்டாங்க என்கிறார். எனக்கு எல்லாம் தெரிஞ்சிட்டு உங்களுக்கு வேற ஆளே கிடைக்கலையா என்கிறார்.
அம்மா தான் என ராதிகா கூற அவரை இழுத்துக்கொண்டு நேராக ஈஸ்வரியிடம் செல்கிறார். எதுக்கு இதெல்லாம் பண்ணி வச்சிருக்கீங்க என்கிறார். ஏற்கனவே அவங்களுக்கு போட்டியா தான் இந்த பிசினஸை இவர் செய்றதா நினைச்சிட்டு இருக்காங்க. இப்போ அவங்களுக்கே ஆர்டர் கொடுத்தா என்ன நினைப்பாங்க. ராமமூர்த்தி நீ சொல்றதும் சரிதான். போம்மா நான் பேசுறேன் என ராதிகாவை அனுப்பி வைக்கிறார்.
இதையும் படிங்க: ஒரு தக்காளி பழத்தால் சென்சாரில் சிக்கி தூக்கப்பட்ட எம்.ஜி.ஆர் பாடல்!.. இப்படியெல்லாம் நடந்துச்சா!…
சமையலறையில் பாக்கியா உட்கார்ந்து எழிலுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். அங்கு வரும் கோபி சத்தமில்லாமல் தண்ணீர் பிடித்து செல்ல எழில் அவரை கலாய்த்து சிரிக்கிறார். இதனால் கடுப்பாகும் கோபி உன் ரெஸ்டாரெண்டுனு தெரியாது. இல்லனா கேன்சல் பண்ணி இருப்பேன் என்கிறார். டெலிவரி பண்ணப்ப செஞ்சிருக்கலாமே என பாக்கியா கேட்க அம்மாக்காக சும்மா இருந்தேன் எனக் கூறிவிடுகிறார்.
உடனே எழில் அவங்க செஞ்சது உதவி அதுக்கு நன்றி சொன்னீங்களா என்கிறார். இப்போ என்ன ரொம்ப நன்றி. இப்போ போய் தூங்குவியா என்கிறார். ரொம்ப நிம்மதியா போய் தூங்குவேன். என்னை உதவாக்கரையுனு சொன்னவங்களுக்கு உதவி செய்யும் நிலைக்கு வளர்ந்து இருக்கேனே என்கிறார். இதனால் கோபி கடுப்பாகிவிட இத்துடன் இன்றைய எபிசோட் முடிந்தது.